- Saturday
- January 18th, 2025
இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் செவாலியே கமல் ஹாஸனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது. செவாலியே கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பலரும் கமலை வாழ்த்துவதால் #Happybirthdaykamalhaasan என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில்...
வடக்கு மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்கென 600 மில்லியன் யூரோக்களை வழங்க ஒஸ்ரியா மற்றும் நியூஸ்லாந்து நாடுகள் முன்வந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த தொகையானது வடக்கு மாகாணசபையிடமோ அல்லது மத்திய அரசாங்கத்திடமோ கையளிக்கப்படாது குறித்த நாடுகளின் நேரடி தலையீட்டுடனேயே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்த 'காஷ்மோரா' படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு நடைபெற்ற சக்சஸ் மீட்டில் படத்தின் இயக்குனர் கோகுல், கார்த்தி, படத்தை அங்கு வெளியிட்ட பிவிபி சினிமாஸ் பிரசாத் வி பொட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்...
ரெமோவில் பெண் வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டப்போகிறாராம். அந்த வகையில், மோகன்ராஜா இயக்கும் படத்தில் ஆக்சன் வேடத்தில் நடிக்கும் அவர், சண்டை காட்சிகளில் இதுவரை நடிக்காத அளவுக்கு அதிரடியாக நடிக்கப்போகிறாராம். அதையடுத்து பொன்ராம் இயக்கத்தில் காமெடி கலந்த கதையில் நடிப்பவர், இன்று நேற்று...
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். அதோடு, தனது அடுத்த படத்தையும் அவர் ரஜினியை வைத்தே இயக்குகிறார் என்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், ரஜினியை வைத்து படம் இயக்கியவர்கள் ரஜினிக்காகவே கதை பண்ணினார்கள். ஆனால் ரஞ்சித்தோ, ரஜினி படத்தை...
விஜயின், 60வது படமான பைரவாவை, வழிமேல் விழி வைத்து, எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர், அவரது ரசிகர்கள். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என, முதலில் கூறப்பட்டது. ஆனால், பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதால், ரிலீசும் தள்ளிப் போயுள்ளது. இந்த படத்துக்காக, கீர்த்தி சுரேஷுடன், முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் விஜய். வீரம் படத்துக்கு வசனம் எழுதிய பரதன்...
சினிமா நடிகர், நாடக நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், ஓவியர்... என பல்கலை வித்தகர் கிரேஸி மோகன். கமலின் அநேக காமெடி படங்களில் கிரேஸியின் பங்கு நிச்சயம் இருக்கும். உதாரணமாக அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராசன், தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்., என்று... பல படங்களை உதாரணமாக சொல்லலாம். என்னதான்...
விக்ரம் நடித்த தில், தூள், விஜய் நடித்த கில்லி, குருவி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி. 2011ல் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தை இயக்கிய பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை. அதையடுத்து சில கதைகளை ரெடி பண்ணி விட்டு முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வந்த அவர், இப்போது விக்ரம்...
‘ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் டைரக்டு செய்து உள்ளார். விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் பிரபல நகைச்சுவை நடிகர்...
நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி நேற்று அறிவித்தார். கவுதமி பிரிவு குறித்து கமல் அறிக்கை வெளியிட்டதாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி...
சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக இணைந்து நடித்த மெகா நடிகை ஹன்சிகா. அவர் நடித்த பிறகுதான் மற்ற முன்னணி நடிகைகள் அவருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டினர். தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் சிவகார்த்திகேயனை மீண்டும் இயக்கும் படத்தில் சமந்தா...
இதுவரை சினிமா உலகில் சிக்ஸ் பேக்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பாலிவுட் சினிமாவில் சில நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்ததை அடுத்து தெலுங்கு, தமிழ் சினிமாக்களிலும் நடித்தனர். அந்த வகையில், சூர்யா, சிம்பு, விஷால், அதர்வா உள்பட சில நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்தனர். ஆனால் அது ஒரு சீசன் போலாகி விட்டது. இப்போதெல்லாம் அந்த மாதிரி யாரும்...
தனது இரண்டாவது படமான தேவா படத்திலேயே அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்ற பாடலை பாடியவர் விஜய். அதிலிருந்து தனது ஒவ்வொரு படங்களிலுமே பின்னணி பாடி வந்த அவர் ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்தினார். பின்னர், தலைவா, துப்பாக்கி, ஜில்லா, கத்தி என தொடர்ந்து டூயட் பாடல்களாக பாடி வருகிறார். அப்படி விஜய் சமீபகாலமாக பாடிய எல்லா...
நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று நடிகை கவுதமி அறிவித்து உள்ளார். 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை...
மங்காத்தா படத்தில் விஜய் ரெபரன்ஸ் வைக்குமாறு அஜீத் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படம் சூப்பர் ஹிட்டானது அனைவரும் அறிந்ததே. அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் வெங்கி தயாராக உள்ளார். இந்நிலையில் படம் குறித்து வெங்கட் பிரபு அண்மையில் கூறுகையில், மங்காத்தா படத்தில் மும்பை தியேட்டரில்...
முத்துராமலிங்கம் படத்தில் இளையராஜா இசையில் கமல் பாடிய, "தெக்கத்தி சிங்கமடா.." பாடல் டீசர் வெளியாகியுள்ளது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் புதிய படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கவுதம் கார்த்திக் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளனர்....
வாலு படத்தில் நடித்து வந்தபோது பல பிரச்சினைகளை சந்தித்தார் சிம்பு. ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதன்பிறகு வாலு படம் அவ்வப்போது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அந்த படத்தை வெளியிட முடியாத நிலை என பல பிரச்சினைகளை சிக்கி சிதைந்து போனார் மனிதர். அதோடு சினிமாவில் வேலை இல்லாததால் கைசெலவுக்கு கூட...
2016ம் ஆண்டில் விஜய்சேதுபதி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். எப்படி என்றால் அவர்தான் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த ஹீரோ. கடந்த 2015ம் ஆண்டில் புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் என 3 படங்களில் மட்டுமே நடித்திருந்த விஜய் சேதுபதி, இந்த ஆண்டு சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன்...
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படப்பிடிப்பு பல மாதங்களாக இடைவிடாமல் நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்பட சில வெளிநாடுகளிலும் நடந்து வந்த நிலையில், சென்னையில் உள்ள பின்னி மில்லில் பல செட்டுகள் போட்டு படப்பிடிப்பு அவ்வப்போது நடத்தப்பட்டது. அந்த வகையில், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நகரத்தில் உள்ள விஜய் சம்பந்தப்...
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில்கொண்டு, என் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். கமல்ஹாசன் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அங்கு பட வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். 2 மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்...
Loading posts...
All posts loaded
No more posts