- Saturday
- January 18th, 2025
நடிகை கவுதமி தனது மகளை நடிகையாக்க தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். நடிகை கவுதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து ஓராண்டில் பிரிந்துவிட்டார். சந்தீப், கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமிக்கு தாய் வழியில் நடிகையாக ஆசையாக உள்ளதாம். மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துள்ளாராம் கவுதமி....
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழைய ரூ.500,...
கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' கடந்த 11ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான 'சாஹசம் சுவாசகா சாகிப்போ'வும் அதே தினத்தில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களுமே இளம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. கடந்த மூன்று...
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரஞ்சித், ரஜினி...
அஜீத்தின் பெருந்தன்மையை பல வருடங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியே கூறியுள்ளார். நடிகர் அஜீத் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். அவர் எந்த ஒரு பிரச்னையிலும் சிக்காமல் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதன்படி நடப்பவர். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜீத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரும்,...
பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகை சபர்ணா தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துக் கொண்ட சபர்ணாவின் உடலை அழுகிய நிலையில் மீட்ட போலீசார், அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சின்னத்திரை தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சபர்ணா, மர்மமான முறையில் அவரது...
சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது. ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற ரூ.2 கோடி செலவில் திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது....
விஜய் தனது மகன் சஞ்சய்யை ‘வேலாயுதம்’ படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக...
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் இன்று முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் அடுத்ததாக சந்தானத்தை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், விக்ரமிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அச்சம்...
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த படம் நானும் ரெளடிதான். இந்த படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ். அவர் நடித்த காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியதால், பின்னர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்குத்துட்டு படத்திலும் காமெடி வேடத்தில் நடித்தார் ஆனந்தராஜ். அந்த படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடித்தபோதும் காமெடி காட்சிகள் ஸ்கோர் பண்ணியிருந்தார். விளைவு,...
தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களுக்கு 100 சதவிகிதம் திருப்தி கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகர்களுமே நினைப்பார்கள். அதிலும் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கதை விசயத்தில் இன்னும் கவனமாக இருப்பார்கள். அந்த வகையில், விஜய்யைப்பொறுத்தவரை ஒரு படத்திற்கான கதையை செலக்ட் பண்ணுவதில் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறார். முக்கியமாக, எந்தவொரு இயக்குனர் ஹிட்...
தன்னிடம் வாங்கிய ஒரு கோடி ரூபாய் முன்பணத்தை சிம்பு திருப்பித் தர மறுக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது: இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பு ஹீரோவாக நடிக்க லிங்குசாமி ஒரு படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக சிம்புவுக்கு சம்பளம் பேசி ஒரு கோடி ரூபாய் முன்பணமும் கொடுத்தார்....
ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ரெஜினா, நந்திதா உள்பட பலர் நடித்துள்ளனர். இறைவி படத்திற்கு பிறகு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, தன் மனசுக்கு பிடித்தமான படமாக கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து...
இதுவரை அஜித்தைப்பற்றி அவருடன் நடிக்கும் நடிகைகள்தான் பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் இப்போது அவரது படத்தில் நடித்து வரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளும் அஜித் பற்றி பெருமையாக சொல்கிறார்கள். அதுபற்றி அவர்கள் கூறுகையில், அஜித்தைப்பொறுத்தவரை பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பார். சகஜமாக பேசிப்பழகுவார்....
நேற்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் வந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது....
இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெங்களூருவில் இரண்டு சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் படப்பிடிப்பு ஒன்றின் போது ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அனில் வெர்மா மற்றும் ராகவ் உதய் ஹெலிகாப்டரிலிருந்து நீரில் குதித்தனர். அந்த இரண்டு பேருக்கும் நீந்த தெரியவில்லை என்றும் சரியான நேரத்திற்கு அவர்களை மீட்க முடியவில்லை...
அரண்மனை-2 படத்தை இயக்கிய பிறகு, முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நாயகனாக நடித்தார் சுந்தர்.சி. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், அடுத்தபடியாக சங்கமித்ரா என்றொரு சரித்திர படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமான அந்த...
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன், தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முதல்படத்திற்கே குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற கமல், அதன்பின்னர் திரையில் செய்த சாதனைகள் ஏராளம். கமலுக்கு நேற்று 63வது பிறந்தநாள்....
தற்போது முத்துராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் படம் ஹரஹரமகாதேவகி. இதில் நிக்கி கல்ராணி கவுதம் ஜோடியாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும் சரவணன் உதவியாளர் சந்தோஷ் பீட்டர் இயக்குகிறார். சதீஷ், மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா, ரவி மரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். பால முரளி பாலு என்ற...
ரஜினி, கமல், சரத்குமார், விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், சூரி என பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இதில், கமல், சரத்குமார், சிவகார்த்திகேயன் ஆகியோர் படம் முழுக்க வரக்கூடிய பெண் வேடங்களில் நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்த அந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கமலின் அவ்வை...
Loading posts...
All posts loaded
No more posts