- Saturday
- March 15th, 2025

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது ....

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு...

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் முதலமைச்சரின் கருத்து பெறப்பட்டு அதற்கிணங்கவே இடம்பெறுவதாக, மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சாலைகளுக்கான பேருந்து வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(15) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,...

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...

வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ். மத்திய...

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய பிரதமர் கீரிமலை கூவில் பகுதியில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை...

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில்...

வடக்கையும் கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுயநிர்ணய ஆட்சியில் வாழ்வதே தமது நோக்கமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வதேச மகளிர்தின நிகழ்வு, மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் புதன்கிழமை...

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...

தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயணப் பயன்பாடு அதிகரித்தே வருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சினை உண்டு கொண்டிருகின்றோம். அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம். இந்தச் சவால்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். நேற்று (09) தனது...

யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்....

இளம் விதவைகளை மறுமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை...

புதிய அரசு அமைந்ததும் நிறைவேற்று சபையொன்றை அமைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறியவர்கள் இப்போது தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கத்துவமாக இருந்து கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வாய்திறக்காமலே இருப்பதை நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 'உண்மையான...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில்...

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை...

இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...

எமது தமிழ் சமூகத்தில் முன்னைய வரலாறுகளை தற்போதுள்ள புதிய தலைமுறையினர் மறந்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் புதிய தலைமுறையினர் எமது பழைய வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டடத்தை திங்கட்கிழமை (02) திறந்து...

மக்களுடைய நிலங்களை விடுத்து கடல் பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன...

இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலனாய்வு மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமையன்று ஜெனீவாவில் துவங்கிய...

All posts loaded
No more posts