- Saturday
- March 15th, 2025

மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின்...

தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டுறவுதின நிகழ்ச்சி யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04.07.2015) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

நிரந்தர அரசியல்தீர்வு நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு! – சுமந்திரன்
நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்றுமுன்தினம் குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே...

எங்கள் தந்தை ஒரு திருடன். அவர் எவற்றைத் திருடியுள்ளார் என்பதை புதன்கிழமை (06), மெதமுலனையில் வைத்து கண்டுகொண்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாமல், 'எங்கள்...

தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒவ்வொருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார். அதிகரித்த போதை வஸ்துப் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில்...

இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் பசுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார். "அறிவுப் பொருளாதாரத்தில் சக்தி சவால்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்,நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கான யோகா பயிற்சி, யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து...

கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள் முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மலையாளபுரத்திலுள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் கட்டடத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. அதில் அதிதியாக...

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் இந்த மூன்றையும் ஆண், பெண் இரு சாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர...

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில்...

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல்...

பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 29வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அந்த...

பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறையில் நடைபெற்ற 6ஆவது வெற்றிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த...

முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அது தற்காலிகப் பின்னடைவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகளை சந்தித்து அவர்களுடன், இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்விலேயே...

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18)...

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில்...

All posts loaded
No more posts