- Saturday
- March 15th, 2025

புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பதாக கூறிய போதும் 7000...

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை என்று கூறிய அதேவளை கூட்டமைப்பினை தனது உரையில் கடுமையாக சாடினார். உரையின் முழு வடிவம் அமெரிக்க பயணத்தின்...

பொதுத் தேவைக்கு எனக் கூறி காணி அமைச்சின் ஊடாக வலி. வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்திலும் இராணுவத்தினர் முகாம்களை மட்டும் அமைக்கவில்லை. 13 ஆடம்பர ஹோட்டல்களையும், 2 மாட்டுப் பண்ணைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் விவசாய நிலங்களில் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம் நடைபெறும் தேரதல் அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே...

மக்கள் என்னுடன் இருக்கும் வரை எவருடைய குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளிக்கப் போவதில்லை. மக்கள் அதற்கு பதில் அளிப்பர் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை...

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தற்போது வடக்கில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீண்டும் பிரதமராக்கினால் 2009ஆம் ஆண்டு வென்றெடுக்கப்பட்ட சமாதானம் இல்லாதொழிக்கப்படும். மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பற்ற...

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை எனக் கூறிய ஜனாதிபதி, ஜனவரி 8ம் திகதி...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்காது சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவர்கள் மாணவர்களை சரியான முறையில் கையாள்வார்கள் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.தேவநேசன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு மாதத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து...

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில்...

மிகப்பெரிய யுத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளை கொம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார். 'ராஷபக்ஷ அரசை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும் யுத்த...

இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில்...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான...

இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஒரு தேர்தலுக்கு முன்பாவது இதுவரையில் நாம் எமது மக்களுக்கு இதுவெல்லாம் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு கேட்கத் தகுதியில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி செய்வோம் என்று கூறியே தொடர்ந்தும் வாக்குகளைக் கேட்டு வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல், எமது மக்களை ஏமாற்றி, முடக்கி...

இலங்கையின் வடக்கு -கிழக்கு மக்களுக்கு உசிதமான ஒரு தீர்வு உருவாக உலகத்தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அமெரிக்காவில் அறைகூவல் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். ஓர் இனத்கை குறிவைத்து இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிர்த்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால்,இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம்தான் அதற்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்...

இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில்...

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. 'ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்' என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர...

All posts loaded
No more posts