- Saturday
- March 15th, 2025

நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டதா அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டு சென்றதா நான் செய்த குற்றம்? - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தைப் பகுதியில் சனிக்கிழயன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி,...

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தாலே போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விடும். அதன் மூலம் நம்மைக் காட்டிக் கொடுத்து சுகம் கண்ட எட்டப்பர் கூட்டத்தை யாழ்.மண்ணிலிருந்தே விரட்டியடிக்க முடியும் என்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தொல்புரம் மேற்கு,துணைவி,சுழிபுரம்,பொன்னாலை...

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற் காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் மக்களுக்னும் சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று அவரின் இல்லத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நூற்றுக்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானபம் அமையப் பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கூட்டமைப்பின் தேர்தல்...

"தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்கவேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள்...

காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23), யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்...

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ள தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் போலியான வேறுபாடுகளை சந்தைப்படுத்தி, அவர்களின் பலத்தை சிதறடிக்க சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்...

இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த்...

விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் அங்கு...

எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எனது அரசியல் நகர்வின் ஊடாக ஏற்படுத்தப்பட்டதுதான் சமுர்த்தி உதவித்திட்டம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்புரத்தில் சமுர்த்தி பயனாளிகளுடன் நேற்றய தினம் (22) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது...

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர்...

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த...

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்றய தினம் (21) இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனநாயக...

மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். - இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது....

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...

ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணையில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அறுபது வருடகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த...

தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த...

All posts loaded
No more posts