- Sunday
- March 16th, 2025

செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான இலங்கை அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார். வட இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக...

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தால் எங்கள் இனம் அழிந்து போகும் எனத் தெரிந்தும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவேண்டும் என்று கஜேந்திரகுமார் பிரசாரம் செய்கின்றார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்...

இராணுவத்தினர் வலி.வடக்கு மண்ணில் நீண்டகாலம் உண்டு, உறங்கி வாழ்ந்து விட்டனர். தாங்கள் சுகபோகமாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை. - இப்படித் தெரிவித்திருக்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொணடு...

அரசியல் ரீதியாகப் எம்மைப் பற்றி நாம் ஆராய வேண்டிய காலத்தை எட்டியுள்ளோம் என்றே கூறவேண்டும். அதாவது இதுவரை காலமும் எமது நாட்டின் சரித்திரம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் பிறழ்வாகவும் - தவறாகவும் எழுதப்பட்டு உண்மைக்குப் புறம்பான சரித்தர செய்திகள் எமது மாணவ சமுதாயத்திற்குக் கூறப்பட்டு வந்துள்ளன. உண்மை என்ன என்பதை ஆராய்ந்து...

இருதேசம் ஒரு நாடு என்பது ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம்...

மக்களை ஒருங்கிணைத்து கிராமங்களை மட்டுமல்லாது பிரதேசம், மாவட்டம் என மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதே எமது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

தமிழர் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் - உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்....

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார். சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில்...

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் "எதிர்காலத்திற்கான உத்தரவாதம்" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28)...

“2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில்...

யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து...

"நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது'' - என்று சுட்டிக்காட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும, இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை - நாவுல பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நெல்லியடிக் கட்சிக் கூட்டத்தில் ஒரு பெரியவர் எழுப்பிய கேள்வியும், திரு. சுமந்திரன் அளித்த பதிலும்: கேள்வி: "சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது சரியா? அதை இன்றும் நியாயப்படுத்துகின்றீர்களா?" திரு. சுமந்திரன்: " இந்தக் கேள்வி வரும் என்று தெரியும். இன்றுவரை நானும், சம்பந்தன் ஐயாவும் செய்தது சரியென்றே கூறுகிறேன். சம்பந்தன் ஐயா 1970களில் இருந்து...

மக்கள் நலன்சார்ந்ததே எமது அரசியல் நிலைப்பாடாகுமெனவும் அதனடிப்படையிலேயே நாம் செயற்திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சி சக்கோட்டையில் நேற்றய தினம் (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜெனீவா அறிக்கை வெளியானதும், பகிரங்கப்படுத்தப்பட்டதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். நான் அறிந்தவகையில் குறிப்பிட்ட அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்...

வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 20 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கும் நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நேற்று முன்தினம் மருதனார்மடத்தில் நடைபெற்றது. அதில்...

'தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோம்' என யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்தது. யாழ்....

All posts loaded
No more posts