- Sunday
- March 16th, 2025

எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் பிராந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு கரிசனை...

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது அவர் மீது கொண்ட காதலால் அல்ல, அது இராஜதந்திரம் எனத் தெரிவித்துள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன். யாழ்ப்பாணம் வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது விடுதலைப்...

சம்பந்தனிடம் எப்போதும் ஒரே கொள்கையும் வெளிப்படையான செயற்பாடுமே உள்ளது. ஆகவே சம்பந்தனை சந்தேகப்படாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை நம்பமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர்...

ஆட்சி மாற்றத்துடனான புதிய அரசை கொண்டு வருவதற்கு தாமே காரணமென கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது புதிய அரசு ஏமாற்றி விட்டதாக கூறிவருகின்றமை மக்களை ஏமாற்றும் அவர்களின் மற்றுமொரு தந்திரோபாயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அளவெட்டி கிழக்கு கும்பலை கிராம...

நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகவும் தமிழர்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குள்ளாக்குவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன் தொடர்ந்தும் பேசுகையில்- அபிவிருத்தி அடைந்து வருவதில் எனக்கு ஒரு வீதமும் திருப்தியில்லை. அபிவிருத்தியை விடவும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....

உள்ளக விசாரணையென்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பகத்தன்மையற்ற விசாரணையாகவே அமையுமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் தர்ஷன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கப்படவேண்டும் என்பதிலும் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில்...

இந்துக்கோவில் பராமரிப்பு பணிகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது.அப்பணியை கோவில் தர்மகர்த்தாக்கள்,தர்மகர்த்தா சபைகள் தான் மேற்கொள்ள வேண்டும் என இந்து மதம்,மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்காமணி மண்டபத்தில் இந்து ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

பாடசாலையில் தான் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை அதிபர் ஒரு முறை தன்னை பிரம்பு உடையும் வரையும் அடித்ததாகவும் அதற்கான காரணம் என்னவென்று தான் இன்னும் அறியவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு அசேகா கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு அவர்...

தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணம் எவ்விடத்திலும் தரிக்கப்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் நாடாளுமன்றம், மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்தவைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டியில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே எம்.ஏசுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என...

கடந்தகால தேர்தல்களைவிட இம்முறைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. போட்டியிடுகின்ற பெண்களை நாடாளுமன்றம் அனுப்பி பெண்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி மதனி நெல்சன் தெரிவித்தார். நல்லூரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர்...

"கடந்த காலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக. ஐக்கிய தேசியக் கட்சியின் தலையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர்...

யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தன....

நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே...

பிரபாகரன் யுத்தத்தின் மூலம் அடைய நினைத்ததை இன்று அரசியலின் ஊடாக புலிகள் அடைய முயற்சிக்கின்றனர். நாம் முடித்து வைத்த ஆயுத கலாசாரத்தையும் அவர்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எழுதிய 'யுத்தம் இல்லாத நாடு -...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது பாதுகாப்புப் படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களை படுகொலை செய்திருந்தனர். இந்த குற்றச் செயல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி...

மத்திய அரசை சரியான முறையில் கையாண்டு அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற யாழ்.முகாமையாளர் மன்றம் 2015 பொதுத்...

வடக்கில் சத்தம் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் யுத்தம் ஓயவில்லை என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். நேற்று இந்து ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையிலே, குண்டுகளின் சத்தம் வடக்கில் இருந்தும்,மக்கள் மனதில் இருந்தும் ஓய்ந்து விட்டது...

All posts loaded
No more posts