- Sunday
- March 16th, 2025

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இன்று...

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட கட்சியின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) வடமராட்சியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...

சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையிலுள்ள...

இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று (நேற்று) இடம்பெற்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை இன்றைய...

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இப்படித் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்று...

"வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர். இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம்...

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் (asbestos) கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ‘ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி’ என்ற...

மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்த போதிலும் அவர்கள் இதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது....

ஒரே நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரியுள்ளது. நாட்டில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி வடிவில் இராஜ்ஜியங்களின் ஒன்றியம் சமஸ்டி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசியல் இராஜதந்திர ரீதியில் தங்களுக்கு உள்ள ஜனநாயக பலம் சர்வதேச...

எமது மக்களின் நலன்புரி முகாம் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மல்லாகம் நீதவான் முகாமிற்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள் முகாம் மக்களுடன் கலந்துரையாடும்...

உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

திட்டமிட்ட குடியேற்றத்தினால் தமிழர் சனத்தொகை வீதத்தினைக் குறைத்து, அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து எமது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கையின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் எமது வாக்குகளை முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை பலமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...

தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் எமது அரசியல் பலத்தை மீண்டும் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு...

All posts loaded
No more posts