- Sunday
- March 16th, 2025

நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். எமது மக்களை நாம் கைவிடமாட்டோம். எமது மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம். - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவே தனது வீட்டுக்கு வந்து தன்னை கூட்டத்துக்கு...

இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் கட்டடத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்....

அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம்,...

கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (04.09.2015) இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வடமாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு, தலைவரவர்களே, விசேட அதிதி அவர்களே, மாகாண உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, இவ்வருடத்தைய மாகாண கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது தொழில்த்துறைத்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டுக்கு மாற்றம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை...

இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை...

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது...

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். அவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர்...

தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார். நாட்டு...

"நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இடம்பெறவுள்ள எனது பயணம் வேகமான பயணம் அல்ல. இது மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாடு...

தற்போது மக்களுடைய கைகளில் பணம் அளவுக்கதிகமாக புழங்குவதன் காரணமாக ஆன்மீகத்திலிருந்து தூர விலகி லௌகீக வாழ்க்கை வாழும் காலம் வந்து விட்டது என்று ,வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்துள்ளார். இன்று 23ஆவது நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், துன்பம்...

"புதிய அரசின் ஆட்சியில் நாட்டில் ஜனநயாகம், சமத்துவம், நீதி என்பன நிலைநாட்டப்படவேண்டும். இந்த இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை சபாநாயகருக்கு வழங்கும்'' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தலைமையில் கூடியது. இதையடுத்து...

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம்...

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைத் தடுக்கமுனையும் இனவாதிகளின் முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன். தேர்தலில் பின்னடைவு கண்ட தமிழருக்கு எதிரான இனவாதிகள், நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் கடுமையான தொனியில் இனவாதத்தை விஷமாக வெளியிடுகின்றனர். இதற்கு...

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் கல்வியில் பின்னடைவு என்பது கவலைக்குரிய விடயமாகும். அதாவது போர் மற்றும் பிரதேசத்தின் பின்தங்கிய நிலை காரணமாகவும் கல்வியில் சற்று பின்தங்கி நிற்கின்றோம் என யாழ்.பல்கலையின் முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். யாழ்.பிரதேச செயலகத்தில் பாடசாலைக்கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சர்வதேச விசாரணையையே தொடர்ந்து கோருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறு தான் வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது- அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும்...

நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

All posts loaded
No more posts