மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான பரி­காரம் வழங்கப்பட வேண்டும்! – இரா.சம்பந்தன்

தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வு காண்­ப­தற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்­டங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்கை வௌியி­டப்­பட்­டுள்­ளது....
Ad Widget

சர்வதேச விசாரணையே நடந்தது என்பது இப்போது புரிந்திருக்கும் : மாவை

சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இது சர்வதேச விசாரணையில்லை என்று கூறி இந்த அறிக்கைக்கான பிரேரணையை ஜெனிவாவில் எரித்து, சர்வதேச ஒரு கூட்டத்தினர் மக்களைக் குழப்பினர். இப்போது புரிந்திருக்கும், நடந்தது சர்வதேச விசாரணைதான் என்று. நேற்றுவரை எம்மை ஏசி விட்டு இன்று மகிழ்ச்சி தெரிவிப்பவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்...

முதலுதவி செய்வதை தவிர்த்து வைத்தியசாலையை நாடவும்

நச்சுப் பொருட்களை உட்கொண்ட, திரவங்களை அருந்திய, விஷ ஜந்துக்களின் கடிக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி செய்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம்...

தீவகத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – வேலணையில் டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை, இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணை சரவணைப்பதி சிறி செல்வக்கதிர்காம தேவஸ்தானத்தின் கும்பாபிசேகம்...

தமிழருக்கு நேற்று சந்தோசமான நாள் – வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும்

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ்

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்...

U-turn இல்லை

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில்...

இன்னும் இரண்டு மாதகாலத்தில் படிப்படியாக மீள்குடியேற்றம்! மாவிட்டபுரத்தில் அமைச்சர் சுவாமிநாதன்

இன்னும் இரண்டு மாத காலத்தில் அவகாசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற விடயத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் .எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். புதிய அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் தடைவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில்...

உள்ளக விசாரணையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லாத போது நீதியான விசாரணை நடக்காது!

உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் அக்கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட...

ஐ.நா அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு! – சம்பந்தன் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும்...

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் என அவர் கூறினார். அந்த பாரிய அர்ப்பணிப்பை மறப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். நமக்காக...

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட நிதி கிடைக்காது!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில்...

எண்ணத்தை மாற்றுவோம் – பிரதமர்

அமைச்சர்கள் வசதிகளை பெற்றுக்கொண்டு வேலைச்செய்வதில்லை என்ற எண்ணமே மக்கள் மனதில் இன்னும் இருக்கின்றது. அந்த எண்ணத்தை ஆறு மாதங்களில் மாற்றுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது

எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2020ம் ஆண்டுவரை அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் எதிர்பார்க்க கூடாது என்றும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட...

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச்...

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை...
Loading posts...

All posts loaded

No more posts