- Tuesday
- March 18th, 2025

"இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் தெற்கையும் இன, மொழி,மதம் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதிக்குரிய முழு அதிகாரங்களையும் நாடாமன்றத்துக்கு வழங்கி சட்டவாக்கச் சபையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...

நாட்டுக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பது தொடர்பில் வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

2016ம் வருடத்திற்கான வரவுசெலவுத்; திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்; தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (01.12.2015) ஆற்றிய உரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றக் கிடைத்ததற்காக எமது கட்சியாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பிலும், தொடர்ச்சியாக ஆறு தடவைகளாக...

வடபகுதியின் மூலதனமாக விளங்கும் கல்வியைக் குழப்பி எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டே பல சதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் அவர் தெரிவித்தார். மன்னார்...

நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும். இரு கட்சிகளும் இணைந்ததன் முக்கிய குறிக்கோளை அரசு மறந்துவிடக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...

நாம் ஏனையவர்களின் கைகளை எதிர்ப்பதை விட எமக்கான செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் வருவாயைப் பெற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள இத்தாவில் ஆயுர்வேத வைத்தியசலை மற்றும் உப அலுவலகத்தின் திறப்பு விழா, நேற்று திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்ற போது, அதில்...

யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் சொர்ணாம்பிகை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் எதிர்கால முன்நோக்கிய நகர்வு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் அரசசார்பற்ற...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புகள் மீதான தடையை நீக்கியமை போன்ற காரணிகளால் வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹக்மன லொல்பே ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ‘தமிழீழ விடுதலைப்...

சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் பலப்படுத்த இம்முறை வரவுசெலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் சமூக நலன்புரியை இவ்வரவுசெலவில் மறக்கப்படவில்லையெனவும் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். வரவுசெலவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வரவுசெலவு தொடர்பில் நாம் ஆராய வேண்டும். அதில்...

நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதி...

போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக...

இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச...

கடந்த கால போரினால் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்கள் களைந்து சென்று அமைதிச் சூழல் ஏற்பட்டதால் வீதிகள் திருத்தப்பட்டு காப்பெற் வீதிகளாக்கப்பட்டு அளவுக்கதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றது என வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வீதி பாதுகாப்பு...

"யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்...

ஈரோடு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை சார்பில் தமிழ் அறிஞர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு “எஸ்.கே.எம். இலக்கிய விருது” வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை தலைவர்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார். மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பாராளுமன்ற மைதானத்தில்...

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது வேண்டத்தகாத பல செயல்கள் வேகமாகப் பரவி வருவது, அச்சத்தையும் மன வேதனையையும் தருகின்றது. போதை பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், வேண்டத்தகாத இணைய பக்கங்களில் நுழைந்து உணர்வுகளைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயம், படிப்பில் அக்கறையின்றி புலனுணர்வு சார்ந்த விடயங்களில் பொழுதைக் கழித்து கல்வியை...

போருக்குப் பின்னர் வடக்கில் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது. போர் காரணமாக அழுத்தங்களை...

All posts loaded
No more posts