- Tuesday
- March 18th, 2025

முப்பது வருடகால யுத்தக் காலத்திலும் வட பகுதியில் தடுப்பூசி ஏற்றுவதற்காக பிரபாகரன் இரண்டு தினங்கள் அனுமதி வழங்கியிருந்தார். இதனால் இன்று வடக்கில் தடுப்பூசி வழங்குவது நூற்றுக்கு நூறுவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தனியார் துறையினர் ஊடுருவ...

"வடக்கில் அடையாளம் காணமுடியாத புலனாய்வுப் பிரிவினர்களால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். "முள்ளிவாய்க்காலில் கொலைகளைக் கண்டு சடலங்கள் மீதேறி தப்பித்த தமிழ் மக்கள் இன்று உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, வடபகுதிக்குத் தேவையான உளநல வைத்தியர்களை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்....

"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...

"விடுதலைப்புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது'' என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா என்றும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...

"தொழிலுக்காக கடன் எடுத்து அதை மீளச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வடக்கு மீனவர்களின் கடன்களை இரத்துச் செய்யவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பியான மாவை சேனாதிராஜா. "இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நினைத்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தலாம். இதற்கான வலியுறுத்தலை இலங்கை அரசு செய்யவேண்டும். இந்த விடயம் தொடர்பாக...

இலஞ்ச, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை கடந்த அரசு நடத்தத் தவறியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச இலஞ்ச, ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழுப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசு (மஹிந்த அரசு) ஊழலுடன் செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஏற்பாடு செய்ய...

சமுதாயத்தை நிர்மூலமாக்கி இளைய தலைமுறையின் சுதந்திர தாகத்தை அடக்க முயற்சி! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் எமது இளைய தலைமுறையினருக்கு சுதந்திர எண்ணம் எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...

வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும்...

2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தவை...

சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். தனது...

"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...

"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...

12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...

"தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது'' என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை...

நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்இன்று அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்றி ஆயிரம் ஏக்கர் காணிகளை எம்மக்களிடம் கையளித்துள்ளோம். அதேபோன்று 5300 ஏக்கர் காணிகளை எவ்வித இனவாதமின்றி தமிழர்களின் சொத்துக்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றில்...

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உடபட உயர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (04) பாராளுமன்றில் தெரிவித்தார். சட்டம ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில்...

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது...

"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்'' என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள்...

All posts loaded
No more posts