- Wednesday
- January 15th, 2025
தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16 ஆவது திருக்குறள் மாநாட்டின் நேற்றையதினம் நடைபெற்ற (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய விடுதலைக்கு...
தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என வட.மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது...
வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டமானது நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்...
வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,...
சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த அதனை மேற்கொள்பவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் வழங்கப்படும் கொடுமையான தண்டனைகளைப் போன்று நமது நாட்டிலும் தண்டனை கடுமையாக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான செயல்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும்...
அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த்தலைவர்கள் முதலமைச்சர்...
“யாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது” இவ்வாறு கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “யாழ்ப்பாண...
“வடக்கில் விகாரை அமைத்தாலோ, தெற்கில் கோவில் அமைத்தாலோ யாருக்கும் கேட்க உரிமையில்லை”: சஜித் பிரேமதாஸ
வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது, தெற்கில் இந்து ஆலயங்களை அமைக்கக்கூடாது என சிலர் சிந்திக்கின்றனர். இவ்வாறானவர்கள் எமக்கிடையில் இன,மத வேறுபாட்டை உருவாக்குவதனூடாக...
எம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9...
சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த...
தமிழ்த் தேசத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகப் போராளிகளின் நினைவாக யாழில் அமைந்துள்ள நினைவுத் தூபி வரலாற்றுப் வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் யாழ்.பிரதான வீதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியின் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து...
யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது, தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றதென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். கிட்டு பூங்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் ஆகியோருக்கு...
ஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சமாந்தரமான முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்றும் அவர் தன்னிடம் கூறியிருந்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர்...
தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் நேற்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும்...
நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கோண்டாவில் ஸ்ரீ...
தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துளைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்க என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...
விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை அரசியலில் இலட்சியத்துக்காகப் போராளிகள் உயிர்துறக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், தேர்தல் அரசியலில் அரசியல்வாதிகள் நாற்காலிகளுக்காக இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், எவ்வளவுதான் ஆழக்குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆணித்தரமாகத்...
Loading posts...
All posts loaded
No more posts