- Wednesday
- January 15th, 2025
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் இன்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அருளின்ப தேவன், குணசீலன், யோகரூபன் ஆகியோரே தமது விடுதலையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்த தங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உடனடியாக இந்திய அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும்,...
இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும் நோர்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர்....
இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், இலங்கை அகதிகள் தாக்கியதில் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள முகாமில் இலங்கை அகதிகள் 1900 உள்ளனர். இம்முகாமிற்குள் நேற்று முன்தினம் தேவாலய திருவிழா நடந்தது. அன்றிரவு தேவாலயம் முன்பு இன்னிசை...
தமிழ் நாட்டில் கடும் வெப்பத்தின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சந்தைக்கு அருகே வெப்பத்தை தாங்கமுடியாமல் 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் விழுப்புரத்தில்வீதியில் நடந்து சென்று 70 வயது முதியவரும் பலியாகியுள்ளார். உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து தமிழக பொலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக இந்திய...
ஜெயலலிதாவின் ஆன்மா பற்றி ஓபிஎஸ் சொன்னாலும் சொன்னார், போயஸ் கார்டன் வீட்டில் அலறல் சத்தம் கேட்கிறது, பொருட்கள் உருள்கின்றன என்று பீதியடைந்து போய் உள்ளனர் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள். முதல்வர் பழனிச்சாமி இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிரியை மன்னித்து விடுவேன்... துரோகியை விட மாட்டேன் இது ஜெயலலிதா ஸ்டேட்...
சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சென்னைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில், வாடகை காரின் மூலம் டி நகரிலிருந்து மண்ணடி நோக்கி பயணித்தவேளை கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், விபத்து காரணமாக காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன்,...
தமிழகத்தில் குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த பெருந்தொகை இலங்கை நாணயங்களை, அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். பெசன்ட் நகரை சேர்ந்த உமா என்பவர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது, ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை...
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் தமிழ் நாட்டின் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து கையடக் தொலைபேசிகள் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான...
கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாவதற்கு முதலாகவே ஏற்பட்டுள்ள வெப்பநிலையை அதிகரிப்பில் சிக்கி 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 43 பாகை செல்ஷியஸை தாண்டி வீசும் வெப்ப காற்றினால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும்...
உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும், சுயலாப அரசியலுக்காவும் தமிழகத்தில் சிறு கட்சிகள் உணர்ச்சிப் பொங்க பேசிவருவதாக பிரபல தென்னிந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை, ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக...
தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை...
தாஜ்மஹால் அமைந்துள்ள வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்களின் போது எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தின் அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்ததாக குறிப்பிடப்படுகின்றன. இதன்போது, குப்பைத்தொட்டி ஒன்றிலும் வீட்டு மாடி...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற...
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிடருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூமு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது மீனவர் உயிரிழந்தார்....
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை...
Loading posts...
All posts loaded
No more posts