- Thursday
- January 16th, 2025
பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500...
பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின்...
இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர...
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் சென்றிருந்தபோது...
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புகின்றன என இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.இதன்போதே மேற்கண்ட விடயத்தை நிதின்கட்காரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன்...
தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தமிழக ஊடகமம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த...
இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் (மருத்துவம்) சேருவதற்கு ஏதேனும் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விருப்பம் உள்ளதா என, இந்திய மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.ஸ்ரீ பிரியா...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சிறுநீர் தொற்று சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து சில வருடங்களாக சிகிச்சை பெற்று...
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மகி நூடில்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மகி நூடில்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது...
இந்தியாவில் வீசும் கடுமையான வெப்பக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் வீசி வரும் இந்த வெப்பக்காற்று காரணமாக சில பகுதிகளில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸைத் எட்டியுள்ளது. தென் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவிலேயே வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர்....
அ.தி.மு.கவின் சட்டசபை கட்சித்தலைவர் ஜெயலலிதா ஜெயராம், 5ஆவது தடவையாகவும் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவைத் தொடர்ந்து,28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர். முன்னதாக,...
இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள்...
இந்தியாவின் வடக்கு பகுதியில் 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல் 12.40 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பூமியதிர்ச்சியால் டெல்லி தலைநகரம் உட்பட வடக்கு இந்தியாவின் பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா , சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பான 100 கோடி ரூபாய் அபராதம், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ஆகிவற்றை நீதிபதி குமாரசாமி இரத்து செய்து இன்று...
நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வு டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார்...
ராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய அகதியை சிறையில் அடைக்க நீதி மன்றம் உத்தரவு இட்டுள்ளது நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல் பகுதியில் திரிகோணமலைப்பகுதியைச் சேர்நத சத்தியசீலன(50) இவரது மனைவி பரமேஸ்வரி( 41) மகள்கள் மேரி(18) அஞ்சலிதேவி(15)விடுதலைசெல்வி (13) ஆகியோர் மன்னார் மாவட்டம் பேச்சாளைப் பகுதியல் இருந்து இலங்கை...
இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்படகில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ´கியூ´ பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தங்கச்சிமடம் கண்ணுபாடு கடற்கரையில் நேற்று 20 அடி நீளமுள்ள ஒரு மர்மப்படகு ஒதுங்கி நின்றது. அதில் வந்த கடத்தல்காரர்கள் 4 பேர் தங்க கட்டிகளுடன் ஊடுருவி இருக்கலாம், என கிடைத்த...
இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே...
செம்மரம் வெட்டியதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரா போலீசார் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது 20 பேருமே தமிழர்கள்தான் என்று ஆந்திர மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் செம்மரம்...
தமிழகத்தின் தஞ்சாவூர் ரயிலடியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்ததாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை பொலிஸர் நேற்று கைது செய்துள்ளனர். இதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம். எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படுவர் எனக் கூறிய இலங்கை ஜனாதிபதியைக்...
Loading posts...
All posts loaded
No more posts