- Friday
- January 17th, 2025
புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அறுவர், இந்தியாவின் மத்திய கல்கத்தா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (14) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அறுவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னரே சென்னையிலிருந்து கல்கத்தா நகருக்கு வந்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள...
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள் இருவரும் இந்திய சுங்க திணைக்களத்தின் உளவுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் தமது பாதங்களுக்கிடையில்...
ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன....
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சில காரணங்களை கூறி, அவரை...
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை...
இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அன்றைய தினம் குறித்த...
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் நேற்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம் கலந்து கொண்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி சரிந்த அவர் அங்குள்ள...
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில்...
இலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க...
சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை பெற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது....
75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர...
தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது)...
தான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமில் வசிக்கும் ஒருவர் என தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முக...
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் காரில்...
இலங்கை - இந்தியாவை இணைத்து அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீதிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதிஉதவி பெற எதிர்பார்த்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். ராமேஸ்வரம் இலங்கை இடையே 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மதுரை- பரமக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு...
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கின் விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்று புதன்கிழமையன்று தொடங்குகிறது. ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த...
Loading posts...
All posts loaded
No more posts