- Friday
- January 17th, 2025
வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலை காலமானார். இவருக்கு வைகோ, வை.ரவிச்சந்திரன் என்ற 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார். அவர் உடல் நிலைகுறைவு காரணமாக...
சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபாகரனை 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்கால நிலை குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்,...
இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அரசுக்கே அனுப்பிவரும் நிலையில், தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பித் தரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். தேசிய விருதுகளை திரும்ப அளிப்பவர்களுக்கும் கூட பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை என்றார் அவர்....
தமிழ்நாட்டில் செய்யாறு அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்த இலங்கை அகதி ஒருவர் விஷம் உட்கொண்டு உயிரிழந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமையினால் விஷம் உட்கொண்ட பெண் ஒருவர் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய இராஜேஸ்வரி எனப்படும் பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இராஜேஸ்வரி தனது கணவரின்...
போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்: இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி...
மும்பையை சேர்ந்த சிவசேனா தலைவர் அனில் சவுகான் நேற்று அடையாளம் தெரியாத சில மர்ம மனிதர்களால் சுடப்பட்டார். நேற்று மாலை 8.15 மணிக்கு ஜனதா நகர் காஷ்மீரா பகுதியில் உள்ள மிரா சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அனில் சவுகான் உடனடியாக பகவத் வேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...
இலங்கை சிறையில் வாடும் தமிழ மீனவர்கள் 87 பேரை விடுவிக்க வலியுறுத்ததி ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் 10,000 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்த்திய, மாநில அரசுகள் மீனவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடுபத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 39...
இலங்கை யுத்தம் முடிந்த நிலையில், பிரபாகரன் இறந்து விட்டதாக காட்டப்பட்ட உடல் உண்மையில் அவருடையது இல்லை என்றும், பிரபாகரன் உயியோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், இந்திய ரா முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார். அதில்...
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராக செயல்பட்ட போராளி தமிழினி, புற்றுநோய்க் கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்று செய்தி...
இராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த பைபர்கிளாஸ் படகு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன் கரை ஒதுங்கியது. இந்த படகில் ஆட்கள் யாரும் வந்தார்களா என்பது குறித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக மரைன் பொலிஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு, நேற்று இராமேஸ்வரம் சென்றார். சங்குமால்...
இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத்தமிழ்மகள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விடுதலைப் புலிகள்...
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் உள்ள...
சென்னை ஐகோர்ட்டில், கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– ‘போர்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியுள்ளேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு, திரைபட தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்தேன். இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி இந்தியா-இலங்கை நட்புறவுக்கு கேடு விளைக்கும்...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...
தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச்...
மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையை எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய அமையத்தின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை...
தமிழக அகதி முகாம்களில் இருந்த ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளனர். கொச்சி பொலிஸாரால் முனம்பம் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவர்களுடன் நான்கு இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் பெரிய கப்பல்கள், இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்...
இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை´ எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச்...
Loading posts...
All posts loaded
No more posts