தன்னை நிராகரித்த தமிழக மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சங்கார

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10,000 USA டொலர் நிதியுதவி (6 இலட்சத்து 66 488 இந்தியன் ரூபாய்) வழங்கியுள்ளார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்ககார. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடந்த IPL ல் குமார் சங்ககார மற்றும் சிங்கள இனத்தவர்கள்...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Ad Widget

சென்னை விமான நிலையம் பகுதி அளவில் திறக்கப்படுகிறது

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் இன்று சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப்...

சென்னையில் மீண்டும் மழை: கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல்...

வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! – இந்திய அரசு

இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு அடிப்படையற்றது என்று நேற்று இந்திய...

இலங்கை அகதி தற்கொலை முயற்சி

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய 20 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது...

2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுநிலை வலு இழக்கிறது : அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள...

சென்னை வெள்ளத்தினால் ஈழ தமிழர்கள் பாதிப்பு

இந்திய சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஈழ தமிழர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். ஈழ தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளை,...

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – இந்திய வானிலை அதிகாரி

தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு மழையின் அளவு குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் மத்திய வானிலை துறையின் டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டில்...

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம்

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 2 பேர் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த மூன்று விமானங்கள் மற்றும் அதிகாலை 01.45 முதல் இரவு 10.15 வரை சென்னையில் இருந்து இலங்கை வரத்...

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத்...

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு உயிராபத்து

தமிழகம் – மதுரையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தங்களது உயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மதுரை – ஆணையூரில் உள்ள ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் அத்துமீறி நுழையும் குண்டர்கள் குழுவினரினால் தங்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஈழ அகதிகள் முறையிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி முகாமிலிருந்து தொழிலுக்காகச் சென்றுவரும்...

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு

இந்திய மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்திய கடலோரபாதுகாப்பு குழுமத்தின் கடலோர பொலிஸ், வழக்குத்தாக்கல் செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் ஆழ்கடலில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியன்று மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்யுமா? எஸ்.ஆர்.ரமணன் பதில்

வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டியது. அதிலும் குறிப்பாக கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல்...

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல...

பஞ்சாங்கத்தில் புயல் பற்றிய கணிப்பு : 22ம் திகதி புயல்!!

வானத்தில் சுழலும் நவகிரகங்களின் இயக்கம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தொடர்பான குறிப்புகள் அடங்கியது ‘பஞ்சாங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை சுலோகங்களாக (பாடல்களாக) எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை...

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை, கனமழை தொடரும் -இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை என்றும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று...

திருச்சியில் இலங்கையர் நால்வர் நிபந்தனையின்பேரில் விடுவிப்பு

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்த நான்கு பேர் நிபந்தனையின் பேரில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக இலங்கைத் தமிழர்கள் 14 பேர் கடந்த சில ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கும்...

ஆட்டோ ஓட்டுவதில் உலக சாதனை !! (வீடியோ இணைப்பு)

இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை அதிக தூரம் ஓட்டி சென்று உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த ஜெகதீசனின் பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தக பிரதியில் இடம்பெற இருக்கிறது. மும்பையில், நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை காட்டிலும், இரு மடங்கு கூடுதல் தூரத்தை அவர் கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்....
Loading posts...

All posts loaded

No more posts