- Friday
- January 10th, 2025
இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர். யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த...
நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற பெருந்தொகையான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால்...
மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லியனகே தலைமையில் முன்னாள் ஊழியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது. சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4...
முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (01.06.2016) திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஏழு மில்லியன் ரூபா செலவில் இந்த...
ஸ்ரீலங்காவின் வட பகுதி அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது. வட பகுதியில் கனடாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை, கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஸ்ரீலங்கா பிரதிநிதி பீற்றர் பச்சுலர் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். பாற்பண்ணை மற்றும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு...
யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இவ் வருடம் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மகிபால கூறினார். மேலும் வைத்திசாலைக்கான விசேட மருந்து உபகரண இயந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், அதி விசேட சிகிச்சைக்கான பிரிவுகள் மற்றும் விபத்துக்கான பிரிவுகளும் அமைக்கப்படும் என்று அவர்...
இராணுவம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய கொள்கை பிரகடனம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கபடுமென எதிர்பார்க்கின்றேன் என வனஜிவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து வேலைத்திட்டங்கள்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் யாழ். மாவட்ட செயலகத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவது குறித்து அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ரிசாட் பதியுதீன் இவ்வாறு...
வட மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழற்சாலைகளை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது குறித்த முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயண தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயங்கவைப்பது தொடர்பாகவே இப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. யாழ்...
சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுல சிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள...
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவினால் ஆரம்பிக்கப்பட்ட 'கம் உதாவ' (கிராம எழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை நெருங்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை...
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் ஓடுபாதையை தரமுயர்த்தும் செயற்பாடுகளுக்கு இந்தியா – இலங்கை தரப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பலாலி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு வலிகாமம் வடக்கு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையடுத்தே விரிவாக்கல் திட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, இந்திய விமான தொழிநுட்பப் பிரிவைச்சேர்ந்த ஐந்துபேர் அடங்கிய குழுவொன்று...
யாழ்ப்பாணம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக பெரு நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்வாறு...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் பாரிய உணவுக் களஞ்சியமொன்று அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பபாளர் அ.கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இபாட் திட்டத்தின் கீழ் மூன்று நெற்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி அறிவியல்...
வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்துக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச்...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் இந்தாண்டு யாழ் மாவட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அமைச்சராக அமரர் பிரேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இந்த வீடுகள்...
வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள (பலாலி) கப்பல்த்துறை முகத்தினை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசணை தேவையாக உள்ளதாகவும் அதனுடாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மிகவிரைவில் எடுக்கப்படும் எனவும் கப்பல், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். வடக்கில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக எமக்கான கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் வழங்கியிருக்கின்றன. அவற்றை இன்றை தினம்...
Loading posts...
All posts loaded
No more posts