வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைப்பு

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (24.05.2017) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்...

இவ்வருட இறுதிக்குள் யாழ்.நகரம் மூலோபாய நகரமாக மாற்றமடையும்: சம்பிக்க

“யாழ்ப்பாணத்தினை, இவ்வருட இறுதிக்குள் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைத்து மூலோபாய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்திகள் தொடர்பாக நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தினை மூலோபாய நகரமாக மாற்றி...
Ad Widget

6 ஆயி­ரம் பொருத்து வீடு­களுக்கு அனு­மதி

வடக்கு – கிழக்­கில் முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட – பொருத்து வீட்டை அமைப்­ப­தற்கு செவ்­வாய்க் கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தலா 15 லட்­சம் ரூபா செல­வில் 6 ஆயி­ரம் வீடு­கள் இதற்கு அமை­வாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்­கில் அமைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. வடக்கு...

வடக்கு மாகாணத்தில் இந்திய, இலங்கை நட்புறவு மையம்

வடக்கு மாகாணத்தில் சுமார் 300 கோடி ரூபா செலவில் இந்திய – இலங்கை நட்புறவு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையத்தின் பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் நாகை மாவட்ட மக்கள் உருவாக்கியுள்ள நாகை...

வடக்கு மாகாணசபைக்குட்பட்ட 6 வைத்தியசாலைகளை தரமுயர்த்த மத்திய அரசு ஒப்புதல்!

வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­களத்­திற்கு கீழ் உள்ள 6 வைத்­தி­­யசாலை­க­ளைத் தரம் உயர்த்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு ஒப்­பு­தல் அழித்துள்ளதாக மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கீழ் இயங்­கும் 110 வைத்­தி­ய­சா­லை­க­ளில் 6 வைத்­தி­ய­சா­லை­க­ளைத் தரம் உயர்த்­து­வ­தற்காக மாகாண சபை­யில் தீர்­மா­னம் கொண்டுவரப்பட்டு கொழும்பு சுகா­தார...

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்...

கீரி சுற்றுலா கடற்கரையை திறந்துவைத்தார் வடக்கு முதல்வர்

மன்னார் நகரசபை பிரிவிற்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் நகரசபையின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு...

பஸ் கட்டணங்கள் இலத்திரனியல் அட்டைகளில்

பஸ்களில் இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தலுக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அதிஉயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) அமைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணப்பணிகள் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன்...

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்துவைப்பு

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆயரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படையினரால் கடந்த மாத இறுதி பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்...

யாழில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை!

இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையினைக் கொண்ட முதல் நகரமாக யாழ்ப்பாணம் அமையவுள்ளது. இதற்கு உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ்நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள், முக்கிய அரச அலுவலகங்களை இணைக்கும் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப்...

வேலணை பிரதேச வைத்தியசாலை புதிய வெளிநோயாளர் கட்டடம் திறப்பு

யாழ்.வேலணை பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவு கட்டடம் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன் வேலணை பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த...

வடக்கில் 44 மாதிரிக் கிராமங்கள்!

வடக்கு மாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த கிராமங்களில் 2500 வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் இதற்கான 1267 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய...

யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்தவும் : ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடிகான் கட்டமைப்புக்களும், நீர்த்தேக்கங்களும் முறையான தராதரத்துடன் பாராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. யாழ் நகரின் அழகை தொடர்ந்தும் பேணுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்....

முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்

அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த...

72 இலட்சம் ரூபா செலவில் இருபாலையில் நீர்த்தாங்கிகள்

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது

யாழ்குடாவில் பெருந்தொகை இறால்! இந்திய மீனவர்களின் அத்துமீறல் வீழ்ச்சி

யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது. 20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 2017ஜனவரி மாதம் வரை யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் மொத்தமாக 578,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரவியலில் இருந்து இந்த தகவல்கள்...

யாழ்ப்பாணத்தில் கலப்பு மின் உற்பத்தி நிலையம்

இலங்கையில் முதல் தடவையாக கலப்பு மின் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாணம் எழுவைதீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இந்த மின் திட்டத்தை நேற்று திறந்துவைத்தார். இந்தத் திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது....

யாழில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையம் கடற்படை தளபதியால் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டம், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்னவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு,...

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...
Loading posts...

All posts loaded

No more posts