- Tuesday
- January 7th, 2025
தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் குறைந்தக் கட்டணத்திலான விமான சேவை மிகவிரைவில் ஆரம்பிக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் ஜோன் அமரதுங்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கூறியுள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி...
இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8 விமான அம்புலன்ஸ்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்....
யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட...
விரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வந்திருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதமர் வடக்கின் முக்கிய...
கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு பிரிவுகள் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் என்பன இயங்கி வருவதுடன், தனியார் துறையின் கீழ்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 68 மில்லியன் நிதி முதற்கட்டமான கிடைக்கப்பெற்றுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகள்...
வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே நேற்றையதினம்...
யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்...
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக, வடக்கின் பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன்படி இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப்...
யாழ். போதனா வைத்தியசாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் (கிளினிக்) அமைக்கப்பட்டுள்ள குறித்த மின் உயர்த்தியை சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் திறந்து வைத்தமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது....
உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியால் சாவகச்சேரி நகர...
யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு கட்டிடத் தொகுதியை திறந்துவைத்தார். மத்திய அரசின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன் ரூபா நிதியில் வடமாகாண சுகாதார அமைச்சினால் இந்த கட்டடம்...
மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின்...
யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள்...
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார். இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுறுத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல...
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் (ரூபா 6.9 பில்லியன்) அமெரிக்க டொலர் நிதியினை இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா (David Rasquinha) மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்எச்எஸ் சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய...
இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன்...
காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில், ‘காங்கேசன்துறைக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க இலங்கை மற்றும் இந்தியா...
மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார். 2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர்...
ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம்...
Loading posts...
All posts loaded
No more posts