- Sunday
- January 5th, 2025
காங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள்...
யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) வடக்கிற்கு வந்த பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது...
வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு 800 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமராட்சி, தென்மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருட இறுதியில் அமைச்சரவை மாற்றத்தின்போது ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த சமூக மேம்பாட்டுத்துறை...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் அடுத்த மாதமளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினது...
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது. பிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, விமான ஓடுபாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளது. போர்க்காலத்தில் இராணுவத்...
வடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற நான்கு துறைகள் ஊடாக வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது....
சாவகச்சேரியில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை மீள்சுழற்சி செய்வதற்கான நிலையம் அமைக்க சாவகச்சேரி நகர சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு அண்மையில் வருகைதந்த வேள்ட் விஷன் அதிகாரிகள் நகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி செயற்பாட்டை பார்வையிட்டிருந்தனர். இதன்போது தரம் பிரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி...
போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்...
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே...
வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று...
பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை...
இலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது. இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்தியை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிலைய அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள முதலாவது திட்டமாக இது...
அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு...
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைத்தொழிற்சாலைகளை மீள...
பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கான வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால், பலாலி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திகள் வருகை தரும், வெளிச் செல்லும் பாதை வரைபடம் வரையும் பணி, சிவில் வானூர்திப் பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளை மாத்திரம் முதலில் பூர்த்தி செய்து தமிழகத்துக்கான...
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு...
யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன்...
யாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இந்திய விமான சேவைகளை...
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை விரைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி சிறப்புச் செயணியில் ஆராயப்படும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரிய்படுத்தி அவற்றை உடனே நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த...
Loading posts...
All posts loaded
No more posts