- Sunday
- December 22nd, 2024
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன், யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். (more…)
தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற்ற 8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாகவும், யாழ் இந்து கல்லூரி சார்பாகவும் வெண்கல பதக்கத்தை வென்றார்.இலங்கையில் இருந்து 5 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அதில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில்...
வடமாகாணத்தில் சில பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது பௌத்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார். (more…)
பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலை அதிபர்களே பதவி வகிக்க வேண்டும் என வட மாகாணக் கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக குறித்த பாடசாலையின் அதிபர்களே இருக்க வேண்டும். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் நிதிச் செயற்பாடுகள் அரச...
நீர்வேலிப்பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் கணவன் – மனைவி இருவரும் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மகன் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணி பிரச்சனை காரணமாக சகோதரனே தனது சகோதரியையும் மைத்துனரையும் வீதியில் வழிமறித்து வெறியாட்டம் ஆடி வெட்டிப்படுகொலை செய்திருப்பதாக முந்திக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. (more…)
தமிழக மீனவர்கள் கூறுவது போல ஒரு தமிழக மீனவராவது இலங்கைச் சிறையில் இல்லை. அனைவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்தியர்களே இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். (more…)
யுத்தம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள போதும் யுத்தத்தால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் வாழ்வாதரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார்.தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். (more…)