- Friday
- November 22nd, 2024
யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் இன்று உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது. இந்த நேரடி மின்விநியோகத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள மின்சக்தி மின்வலு அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.தென்னிலங்கையிலிருந்து வரும் நீர் மின்வலு வழங்கலின் மூலமான 33,000 உயர் மின்அழுத்த இணைப்பு வடமாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வடமாகாணத்துக்கான...
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலளர் எஸ்.இளங்கோவன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் அரச திணைக்களங்கள், பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
வெள்ளிக்கிழமை (03-02-2012) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 32ஆவது வீதியோட்டம்(5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற இளநிலைப் பிரிவு போட்டியை யாழ் இந்துக் கல்லூரியின் இங்கிலாந்து பழையமாணர்சங்கத்தலைவர் திரு..P.விவேகானந்தா ஆரம்பித்து...
ஹோட்டல்ஸ் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாடி கொண்ட “ஜெட்விங் யாழ்” உல்லாச விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா (03.02.2012) வெள்ளிக்கிழமை மதியம் 01.00மணிக்கு நடைபெற்றது.ராஜன் ஆசீர்வாதம் தலைமையில் நடைம்பெற்ற இலக்கம் 37 மகாத்மா காந்தி வீதியல் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், (more…)
மருந்துப் பொருள்களைத் தவிர ஏனைய பொருள்களை மொத்த மாகவோ சில்லறையாகவோ விநியோகம் செய்யும் வர்த்தகர்கள், ஒருவீதம் விற்பனை வரியைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று யாழ்.பிராந்திய உள்நாட்டு இறை வரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்தார்.யாழ்.வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள பொருள் விநியோகம் செய்வோருக்கான கலந்துரையாடல் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. (more…)
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி "அழிவு' ஆகவே இலங்கை தோற்றம் பெறும்....
வாகன சாரதிகளுக்கு எதிராக மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வாகன சாரதிகளும், முன் ஆசனத்திலிருந்து பயணம் செய்பவர்களும் ஆசனப்பட்டியணியாது செல்லும் போது போக்குவரத்து காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதே இடத்தில் தண்டப்பண அறவீடு வழங்கப்பபடும், (more…)
ஊர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை கொண்டிருக்கும் கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும் ?ஈ.பி.டி.பி கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டதனாலாயே வடக்கில் அரச கட்சி மண் கவ்வ வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார் யாழ். மாவட்டத்திலுள்ள அரச வேலையற்ற பட்டதாரி ஒருவர். (more…)
தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 1,500 ரூபா அபராதத்துடன், 4 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். (more…)
யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அனுமதி வழங்குமாறு யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரியுள்ளது.இப்பட்டதாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஊர்வலம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். சுமார் 15,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள நிலையில் 300 பேர் வன்னி...
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார் புதன்கிழமை கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.தங்கத் தாலியை களவு எடுத்து விற்பனை செய்த சந்தேக நபர்கள் ஏழுபேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பிரயாகினி கணேஷலிங்கம் என்ற மாணவி, இந்திய குடியரசு தின நிகழ்வில் விசேட பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் கலாமிடம் கேள்வி கேட்டதுடன், அவர் அளித்த பதிலை அப்படியே மீண்டும் உடனேயே ஒப்புவித்து அவரது பாராட்டைப்...
யாழ். நகரப் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.யாழ். நகரில் மருத்துவ கிளினிக் நிலையங்களை நடத்துபர்களில் சிலர் போலி வைத்தியர்கள் எனவும் இவர்கள் மருத்துவம் செய்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். (more…)
சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு...
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் 25ம், 26ம், 27ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறவித்துள்ளது.அதற்கமைய, 25ம், 27ம், 29ம் திகதிகளில் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடவாவடி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம்...
சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஒரு நாள் போராட்டம் ஒன்றில் நாளைய தினம் ஈடுபடவுள்ளனர்.தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இந்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது....
யாழ். மாவட்ட உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு எதிராக காணி, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு, கட்டிட அமைப்புக்கான அனுமதி கோரல், ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக தினமும் பல முறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். (more…)
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். (more…)
சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி என்று யாழ்ப்பாணத்'திற்கு இன்று விஜயம் செய்துள்ள முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக்...
Loading posts...
All posts loaded
No more posts