- Monday
- February 24th, 2025

வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளைwww.doenets.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ்.கைதடியில் அன்னம்மா ஆலயத்திற்கருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து படையினர் பாரிய படைமுகாமொன்றை பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமைத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன..இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. (more…)

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர்கள் 40 வருடங்களுக்கு பின்பு வந்து யாழ். மாநாகர சபைக்கு சொந்தமான காணியை உரிமை கொண்டாடுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றம் சாட்டியுள்ளார்.யாழ். மாநாகர சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

"இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்'' எனத் தலைப்பிடப்பட்டுக் குடாநாட்டு அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கையெழுத்து இடுமாறுகோரி அனுப்பப்பட்ட மகஜர் அவர்கள் கையெழுத்திடாத நிலையில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.ஜெனிவாவில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்துப் பெறும் மகஜரே அது எனத் தெரிந்துகொண்ட அரச அலுவலர்கள் பலரும் அதில் கையெழுத்து...

இலங்கையில் பிரதேச அமைப்பியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள 15 நகரங்களை அதி நவீன வசதிகள் கொண்ட முன்மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களும் அதி நவீன மயப்படுத்தப்படவுள்ளன. (more…)

யாழ். மவட்டத்தில் 38ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர் இவர்களுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் யாழ். அரச அதிபர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளானர்.யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாசார மற்றும்...

மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஹோமாகம, முல்லேகமவில் மகப்பேற்று மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல மேற்படி கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் (more…)

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயரழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. (more…)

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் தலைமையில் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து...

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு அதி உயர் தண்டனை வழங்கும்படி நேற்று நீதிமன்றில் வலியுறுத்தினர் சிறுமியின் பெற்றோர். நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடலத்தை முதற்கண்ட சாட்சி ஆகிய மூன்று பேரினதும் சாட்சியங்கள்...

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.இவர் தற்போது யாழ். காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிய வருவதாவது, இன்று காலை குறித்த இலத்திரனியல் காட்சியறைக்கு வந்த நபர் இலத்திரனியல் பொருள் ஒன்றை கொள்வனவு செய்து விட்டு பணத்தினை செலுத்த போயுள்ளார்....

தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள், அங்கே பயிற்சியில் காட்டிய அதீத திறமையை பார்த்து, சிங்கள மாணவர்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே கடந்த 12 ம் திகதி யாழ் மாணவர்கள் மீது நடத்திய முதலாவது தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.அதன்பின்னர் கடந்த 14 ம் திகதி...

யாழ்.மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு அருகி வருகின்றமையால் சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.2010ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 110 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு மகளீர் தினமான நேற்று, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில், பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், 10 பெண்களுக்கு மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 106 ஆவது 03 நாள் கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் 08.03.2012 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி...

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ காவலரணிலே பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப் பூக்கள் என்ற குறுந்திரைப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் 08-03-2012 வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விநோதினி சிறீ மேனன் வரவேற்புரையையும், அறிமுக உரையினை ரி.கிருபாகரனும் (இலண்டன்), தலைமை...

All posts loaded
No more posts