- Monday
- February 24th, 2025

2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள...

மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டு ள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகை யில் வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கான அனு மதியினை அரசாங்கம் வழங்கியுள் ளது என்று சுற்றாடல் துறை அமைச் சர் அநுர பிரியதர்ன யாப்பா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். (more…)

தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை...

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேரக்கட்டுப்பாடு தொடர்பான கூட்டம் நேற்று யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மாநகர சபை முதல்வரும் தனியார் கல்வி உரிமையாளர்களும் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.கூட்டத்தில், கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் நேர ஒழுங்கில் வரையறை விதிக்கப்படுகிறது. இதன்படி...
தற்போது யாழ். குடாநாட்டில் பாலியல் கல்வி செயற்திட்டம் கட்டய தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி வி.யோகஸ்வரன் தெரிவித்தார்.யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், (more…)

யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். (more…)

அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு...

எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான நல்லாட்சியை இலங்கை அரசு ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் விரும்பம் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபி யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர், யாழ். ஆயர் இல்லத்தில் செவ்வாய்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் (more…)

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். 1983 ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் தங்கியிருந்த இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது....
யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக, இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய போது, தனது அரச கட்சி என்ற பெயரை பாவித்து இளைஞர் யுவதிகளிடம் மோசடி செய்துள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச...

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

20 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் லக்ஸபான மின்சாரம் நேற்று முதல் பளைப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 91ம் ஆண்டுக்குப் பின்னர் லக்ஸபான மின்விநியோகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. (more…)

மின்சாரக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்தாததினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் காணப்படும் அதேவேளை, பணத் தொகையை செலுத்த மின்சார சபை வழங்கிய காலஅவகாசமும் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்புக்களை வழங்கும் இலங்கை மின்சார சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் கடந்த 8 மாதாகாலத்திற்கும் அதிகமாக மின்சார...

ஊழியர்களுக்கான சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும், போதியளவு பேரூந்துகள் இன்மையானலும், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சேவைகள் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய அலுவலகத்தினருக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாத்திற்கான சம்பள நிலுவைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. (more…)

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும்...
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய 231 மாணவர்களில் 15 மாணவர்களுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன.வேம்படி மகளிர்கல்லூரியில் 18 மாணவிகளுக்கு 9A சித்திகள் கிடைத்துள்ளன. மேலதிக பெறுபேறுகள் விரைவில்....

யாழ்.அரச அதிபரின் பாதுகாப்புக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரின் வாகனம் சங்குவேலிப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்.சங்குவேலிப் பகுதியில் அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமாரின் வாகனத்திற்குப் பின்னால் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சீவரெத்தினம் பாலதயாகரன் (புலிமாறன்) பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் இன்று திங்கட்கிழமை நிராகரித்தார். புலிகளின் சமாதன செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் சகோதரரான பாலதயாகரன், கடந்த 2009 மே 17ஆம் திகதி முள்ளிவாக்காலில் வைத்து இராணுவத்தினரால் கைது...

All posts loaded
No more posts