- Thursday
- December 26th, 2024
யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மாணவரொருவர் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவரான யோகேஸ்வரன் கிரிதரன் (வயது 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் தற்போது அமைதி நிலவுகிறது அத்துடன் மக்களின் வாழ்வும் முன்னேறி வருவது போல் தெரிகின்றது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ். பொது நூலகத்திற்கு காலை 11:30 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் அதன் போது...
யாழ்.வலிகாமம் வடக்கில், அப்பகுதி பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தை தமக்குப் பெற்றுத் தருமாறு இராணுவத்தினர், சபைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த காணியை அதன் உரிமையாளர் அற்ரோனிப் பவர் மூலம் தந்திருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.சாப்பை கலட்டி என்ற பகுதியிலுள்ள 90பேச் அளவுள்ள காணிக்கே இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். இதேவேளை குறித்த காணி 1971ஆம் ஆண்டு...
வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்...
வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களை அரச ஆதரவில் ஏன் குடியேற்றுகிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். தெற்கில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெயர்ந்திருக்கும் எமது தமிழ் மக்களை அரச ஆதரவில் குடியேற்ற முடியுமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கேள்வியெழுப்பியுள்ளார். வடக்குப் பகுதி தமிழர்களுக்கே தனியான உரித்துடைய இடமில்லையென்ற அரசின் கருத்து...
வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ். மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத் தமிழ்த் தினப்போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
இலங்கையின் இறுதிக்கட்ட போர் நடந்த வடக்கு பிரதேசம் தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த விடயத்தில் முக்கிய நபராக பலராலும் பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில் சிறிதளவு எண்ணிக்கையான ஆட்சேதங்களே ஏற்பட்டதாகவும் பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார்....
யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் படிப்படியாக குறைக்கப்பட்டு அவ்விடங்களுக்கு பொலிஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.இன்று திங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய துதுவர் றொபின் மூடி குழுவினரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தலைமையகம்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் இரா. சம்பந்தன் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு நேற்றுக் காலை 9.45 மணிக்கு மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து...
மட்டக்களப்பு ஊறணியில், கடும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த பஸ் வண்டி மீது இன்று பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த சிலரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறதது. (more…)
எமது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருக்கும் - அதன் உருவமாகவும் உயிராகவும் இயங்கு சக்தியா கவும் விளங்குகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மட்டக்களப்பு மண்ணில் - நான் உவகையுடன் வரவேற்கிறேன்.தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஆன்மாவினது சின்னமாக விளங்குவதும் உயரிய விழுமியங்களுடன் தனக்கெனத் தனித்து வமான ஓர் அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டதுமான -...
தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான இம்மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து...
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்ந்ததும் தீர்க்கமானதுமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.தெற்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான...
வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டின் பொருளாதார வளங்களை அள்ளிக்கொண்டுச் செல்வதற்காக புதிது புதிதாக யாழில் முளைக்கும் நிதி நிறுவனங்களினால் யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.யாழ்.வணிகள் கழகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)
இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள நிலைமையை ஒத்ததாக வடக்கு கிழக்கிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என தான் நம்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான வருடாந்த அறிக்கையின் வீடியோவில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க...
இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று 24.05.2012 அன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று காணாமல் போனோர், தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்றவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். (more…)
தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து...
Loading posts...
All posts loaded
No more posts