- Thursday
- December 26th, 2024
இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார். நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர்...
நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. அந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் பங்குகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. (more…)
தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும். வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தனி ஈழத்தை அமைப்பதற்கு மேற்குலகம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே, அரசு அதில் சிக்கக்கூடாது என்றும் அந்த...
வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன. (more…)
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் அரசிற்கு 60 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 7வது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு தொடரப்படுவதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு சரியானதொரு தீர்வு காணப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)
தவறான அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருக்கும் இந்த நாட்டினை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்கு எனது உயிரைத் தியாகம் செய்தாவது அந்தக் கடமையை நான் நிறைவேற்றுவேனே தவிர அரசாங்கத்துடன் நான் இணையமாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சிறையில் இருந்து விடுதலையாகிய இவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனதிற்கும் நிதி அமைச்சிற்கும் இடையில்...
யாழில் கோயில்களில் அண்மைக்காலமாக சிலைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் என்பவற்றைக் கொள்ளையிட்ட குழு ஒன்றை காவற்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் யாழ். காவற்றுறையினர் மீட்டுள்ளனர்.அதனடிப்டையில் அவர்களால் களவாடப்பட்ட பிள்ளையார், அம்மன் சிலைகள் மற்றும் ஒரு தொகுதி கோயில் வாகனங்கள் என்பன யாழ். புகையிரத வீதியை அண்மித்துள்ள மரக்காலை ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் இடமாற்றம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதுவரை காலமும் அதிபராகவிருந்தவரை மருதனார் மடம் இராமநாதன் கல்லூரிக்கு இடமாற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையினை அடுத்து நேற்றய தினம் மாணவிகள் பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர் (more…)
மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.தொடக்க நிகழ்வில் சங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கெனத் தற்காலிக நிர்வாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கில் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தப் பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பனை அபிவிருத்திச் சபை மேற்கொண்டது.கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்டு வரும் பனை ஆராய்ச்சி நிலையத்தை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் திறந்து வைக்கவுள்ளார்.இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையம் அடுத்த மாதம் 13...
மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில், விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது,இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது என யாழ்,போதனா வைத்தியசாலை,இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி T.விஸ்வேந்திரன் தெரிவித்துள்ளார் யாழ்,போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது.எனினும்,சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. (more…)
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்தமாதம் வொசிங்டனில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசியபோது, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை ஹிலாரி கிளின்ரன் வலியுறுத்தியுள்ளார். (more…)
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் கைப்பற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இவற்றில் 29 காணிகளே அரச நிலங்களாக உள்ளன. ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர்,...
இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்று தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம், இலங்கைத் தேசியக் கொடியை...
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் குதித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பெயர் பொறித்த கொடும்பாவியை எரித்து யாழ்.பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். (more…)
யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் 61 ஏக்கர் நிலத்தைக் கபளீகரம் செய்வதற்கு முயன்றது போலவே தென்மராட்சிப் பிரதேசத்திலும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு இராணுவம் முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தென்மராட்சியில் தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள 41 காணித் துண்டங்களைத் தமக்கு உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தென்மராட்சிப் பிரதேச செயலரை இராணுவ அதிகாரிகள்...
சுப்பர்மார்கெட்டுகள், குத்தகை மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் நாணயமாற்றுக் கட்டுப்பாட்டு அதிகாரியான பி.எச்.ஓ. சந்திரவன்ஸ நேற்று கூறினார்.உள்ளூரில் மாற்றப்படும் ஸ்ரேலிங் பவுண், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் மத்திய வங்கியை அடைவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 61 வெளிநாட்டு...
யாழ் காங்கேசன்துறை வீதியில் இன்றுபகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான வீரசிங்கம் ஜெகதீஸ்வரன் (33) ஸ்தலத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இடம் பெற்றது.முன்னே சென்ற வாகனத்தை மோட்டார் சையிக்கிளில் வந்தவர் முந்திச் சென்று கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்களுடன்...
Loading posts...
All posts loaded
No more posts