- Friday
- December 27th, 2024
பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை...
யாழ். பிரிமியர் லீக் (ஜேபிஎல்) போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து...
வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு மீளக்குடியமரப் போவதாக இடம்பெயர்ந்த மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களை நேற்று நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியிடமே மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன் அதற்கு தமது பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவியையும் கோரியுள்ளனர். (more…)
கிராம அலுவலர்கள் நாளாந்தம் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகத்தில் கடமையாற்ற வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் அலுவலகங்களுக்கு இந்த...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் 20 ஆவது நாளாக நாளையும் தொடருமென பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று தெரிவித்தது. இதேவேளை தொழில் ஆணையாளர் முன்னிலையில் நாளை 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்தது. நேற்று முன்தினம் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பல்கலைக்கழக மானியங்கள்...
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றும் தாம் எவ்விதமான பயமுறுத்தலுக்கும் அஞ்சி தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் பயமுறுத்தலுக்கு தான் பணியப் போவதில்லை என நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அந்தச்...
காணி அபகரிப்புக்கு எதிராக நடத்தவிருந்த ஒன்றுகூடலை நீதிமன்றம் தடுத்தமை தொடர்பான வழக்கில் அமைதியான முறையில் மக்கள் முன்னெடுக்கும் இவ்வாறான நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை.எனவே நீதிமன்றம் தனது தீர்ப்பை வாபஸ் பெற வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியதை அடுத்து அது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது....
யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு...
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி கடந்த 6ஆம் திகதியிலிருந்து சாத்வீக வழியில் போராடிவரும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க...
மக்களைக் காவல் காப்பதற்கு இருப்பதாக சொல்லிக்கொள்கிற துறையினரும், கண்ணுக்குப் புலனாகாத துறையினரும் தற்போது யாழ்ப்பாணத்தில் முழுநேர தொழிலாக கழிவு எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களைப் பயன்படுத்தி இன்று அரசாங்கம் வடக்கில் கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது. மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வு நடத்தும் இந்திய நிறுவனங்கள் இனிமேல் யாழ்ப்பாண நிலப்பரப்பிலும் எண்ணெய்...
யாழ். பண்ணை சுற்றுவட்டம், யாழ்.நங்கை உருவச் சிலையும் 18.06.2012 முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த அல்பிறட் துரையப்பாவின் நினைவாக இந்தச் சுற்றுவட்டம் புனரமைக்கப்பட்டு யாழ்.நங்கை உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென அல்பிறட் துரையப்பா குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒரு லட்சம் ரூபா நிதி...
பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது.இருப்பினும் பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் தொடர்ந்து அதிபராக நியமனம் செய்யப்படவேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் தலையீட்டில் அவர் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து...
இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கி விட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று (19) தெல்லிப்பளையிலும், தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்த போராட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இதுவரை நான்கு ஆலயங்களில் சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆட்டுக் கடாக்கள் வேள்வி என்ற பெயரில் வெட்டிச் சரிக்கப்பட்டன.இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு இந்துமத அமைப்புக்கள் கோரி வருகின்றபோதும் சில ஆலயங்களின் நிர்வாக சபையினர் அதனைக் கேட்க மறுத்து தொடர்ந்து இந்தக் கொடும் செயலை ஈனச் செயலை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்பற்று, கவுணாவத்தை,...
வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து பொலிஸார் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.இன்று பிற்பகல் 1.00 மணியளில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு பொலிஸாரும், பெருமளவு இராணுவப்...
யாழ். போதனா வைத்தியாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரேரா தெரிவித்தார்.யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான தலமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் கூறினார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,'எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம்...
வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, "வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்'' என்றும் சவால் விடுத்தார். (more…)
முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts