- Friday
- December 27th, 2024
யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதனும் விவசாய பீட பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தனும் புதன்கிழமை(6) பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து தான் பொலிஸ் மா அதிபருக்கும், யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா தெரிவித்தார் என இணையத்தளம்...
யாழ் மருத்துவர்கள் சங்கம் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.மேற்படி பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவையடுத்து நீதவான் கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நோயாளர்கள் மற்றும் விபத்தில் காயமடைபவர்கள் பாதிக்கப்படலாம் என்பதாலும் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் என தான் எனக் கருதுவதாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு யாழ் பொலிஸ்...
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களது இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக ஊழியர்களும் தொடர்ச்சியான இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இங்கு கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன்...
யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் HNDA, HNDM, பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் இன்று கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் இவர்களின் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது. (more…)
நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு விதித்த நீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் செய்யவேண்டும் என்று கூட்டமைப்பு மற்றும் விடுதலை முன்னணி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி கணேசராஜா, தடையுத்தரவு சரியானதே என்று புதன்கிழமை தீர்ப்பளித்திருந்தார்...
பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கு கடந்த 5,6,7 ம்திகதிகளில் தோற்றிய பட்டதாரிகளில் 2011 டிசம்பா் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகமாயின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் என சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் அனைவருக்கும் பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை(2-7-2012) காலை 9 மணிக்கு யாழ்...
வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று தெரிவித்திருக்கிறது. நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறார்.சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு, இந்திய வீடமைப்புத்...
யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என அதனைக் கண்டித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது.வைத்தியர் வீட்டின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது....
நாடாளுமன்ற சிறப்புரிமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும் விடயங்களை விமர்சிப்பதற்கு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. அங்கு கூறும் கருத்துக்களை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான எம்.எ. சுமந்திரன் யாழ். நீதிமன்றில் நேற்றுச் சுட்டிக்காட்டினார். சுமந்திரன் நாடாளுமன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பில் நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்த விமர்சனம் குறித்தே அவர்...
நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். (more…)
தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது.இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத்...
பதவியைப் பொறுப்பேற்கையில் யாராவது குழப்பம் விளைவித்தால் அல்லது பதவியைப் பொறுப்பேற்க விடாது தடுத்தால் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் உதவியை உடன் நாடி பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோத்தபாய ஜெயரட்னே புதிய அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக வேணுகா சண்முகரத்தினம், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார். நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் இந்த...
வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப்...
கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தமது பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
நேற்று முதல் வெளிநாடுகளினை தளமாகக்கொண்டு புலம்பெயார் தமிழர்களால் நடாத்தப்படும் பிரபல தமிழ் இணையத்தளங்களான LankaSri.com Tamilwin.com Ponguthamil.com Athirvu.com Saritham.com Pathivu.com sankathi.com ஆகியன இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன.இனி இச்செய்தித்தளங்களினை இலங்கையின் இணைய சேவை நிறுவனங்களின் சேவை பெற்ற எவராலும் தமது கணினிகளில் சாதாரணமாக பார்வையிட முடியாது. ஏற்கனவே புலம்பெயர்ந்த சிங்களவர்களால் நடாத்தப்பட்ட பல(lankaenews ,lankanewsweb,srilankaguardian) இணையத்தளங்கள்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக உயர்கல்வி அமைச்சு, திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு அவசர தேவை உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தை அவசியம் எனவும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார். (more…)
2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு செய்து வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....
பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.மேலதிகமாக பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது....
Loading posts...
All posts loaded
No more posts