- Tuesday
- April 22nd, 2025

யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளர் அங்கஜனுக்கு எதிரான வழங்கு திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக்குச் செல்லும் பிரதான வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் பொதுமக்க்ள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்து பெருமளவான தென்பகுதி வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். (more…)

வடமாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அவசர அவசரமாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். (more…)

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இரண்டாவது தடவையாக இன்று வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஆரம்பமானது. இதன்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (16)தாக்கல் செய்தது. கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார்.திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு: (more…)

சமூக சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக யாழ். மாவட்ட முன்னாள் செயலாளர் இமெல்டா சுகுமார் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சுக்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இவருக்கும் நியமன கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவுசெய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. (more…)

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வேணுகா சண்முகரத்தினம், அதிபர் தராதரத்திலிருந்து அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்கு இடையூறாகச் செயற்படின், ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி றாஜினி முத்துக்குமாரனுக்கு அரசசேவைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது....

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. (more…)

நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது சிவாஜிலிங்கம் சார்பாக என்.சிறிகாந்தா, எம்.றெமிடியஸ், என்.திருநாவுக்கரசு, வி.ரி. சிவலிங்கம், கே.பி.எஸ். வரதராஜா, ஏ. ராஜரெட்ணம், சர்மினி விக்னேஸ்வரன், எஸ். செலற்றின்,...

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது. (more…)

யாழ். ஊரெழு பொக்கணை மயானத்திற்குரிய நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென, வலி. கிழக்கு பிரதேச சபை திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், பிரதேச சபையின் எல்லைக்குள் படையினருக்கு நிலம் வழங்க கூடாதென தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.மேற்படி மயானத்திற்குரிய 130 ஏக்கர் பரப்பு நிலத்தினை தமது படைமுகாம் அமைப்புக்கென வழங்குமாறு இராணுவத்தினர், பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த இடம்...

யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலையங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும்,விகாரைகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில்...

யாழ்ப்பாணத்தில் நகரை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமது ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை மக்கள் சொல்லக் கூடிய வகையில் முறைப்பாட்டுப் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. (more…)

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் "தமிழீழ எல்லாளன் படை" தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. (more…)

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தினுடைய நிலவரம் தொடர்பாகவும், பல்கலைக்கழக நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி தொடர்பாகவும் மாணவப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது. (more…)

உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் "உதயன்" ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. (more…)

யாழ். தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கும் இவரது சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போதே இராணுவத்தினர் குறுக்கிட்டுள்ளனர். இதன்போது மது போதையிலிருந்த இவர் இராணுவச் சிப்பாய் ஒருவரை பலமாக தாக்கியுள்ளார்.இதன்போது ஒன்றுகூடிய இராணுவத்தினர் குறித்த நபரை சராமரியாகத் தாக்கியுள்ளனர். (more…)

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக, எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழில் சங்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு யாழ். மாவட்டத்தில் மட்டும்...

All posts loaded
No more posts