- Wednesday
- April 23rd, 2025

பிரான்ஸிலிருந்து யாழ் வந்திருந்த புலம்பெயர் இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார். (more…)

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது. (more…)

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாவதும் தொடர்பாக பத்திரிகையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. (more…)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதியின் கொலைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை எதிர்வரும் 15ம் திகதி யாழில் நடத்தவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.15ம் திகதி காலை 11 மணி தொடக்கம், 12.30மணிவரையில் குறித்த போராட்டம் யாழ்.நகரிலுள்ள பேரூந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையில் புதிய செய்தி இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அத்துடன் வருடாந்த புதுப்பித்தல் கட்டணம் 10,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளரான பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். (more…)

வடக்கில் தேர்தல் நடத்தி அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிழக்கில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் விரைவில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மற்றுமன்றி அவர்களின்...
ஆளுநர்களின் 15 ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடைபெறும் ஆளுநர்களின் மகாநாடு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ்.நீதிமன்ற நீதிபதி விதித்த தடையுத்தரவை ரத்து செய்து தடலாடியுத்தரவொன்றை யாழ்.மேல்நீதிமன்று பிறப்பித்துள்ளது.இலங்கை அரசினது நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை காவற்துறையினர்; முன்வைக்கப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி யாழ்.நீதிபதி மா.கணேசராஜா அப்போது தடை விதித்திருந்தார். (more…)

2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.slelections.gov.lk/electoral/

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சட்டத்தரணி விரைவில் கைது செய்யப்படுவார் என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (more…)

யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் இன்று காலை முதல் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில்...

நாடளாவியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் இன்று முதல் ஆரம்பமாகிறது.இன்றைய தினம் விடுமுறை விடப்படும் இப்பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. (more…)

இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)

வடமாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பெப்ரவரி இறுதியில் அதாவது 26 அந்தத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது என தெரிகிறது.முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசு திட்டமிருந்தது ஆனபோதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பகுதியில் நடைபெற்றுள்ளதால்,அதற்கு முன்னர் இத் தேர்தலை நடத்துவதற்கு அரசு...

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் பணிப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளது நிரூபணமானதையடுத்து நீதியானதொரு விசாரணையினையினை மேற்கொள்ள வேண்டும் எனவே பணிப்பாளரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியில் இருந்து இடை நிறுத்த...
தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால்...

யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மீதான விசாரணை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட மாகாணம் தழுவிய தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பக்கசார்பின்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துமாறு கோரி எதிர்வரும்...

வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் மேற்படி கண்டனத்...

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வேலைக்கு சமூகமளிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலை விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். (more…)

இந்த அரசு பொதுமக்களுக்குத் தெரியாமலேயே இலவசக் கல்வியை மாற்றி அமைக்கப் போகிறது. பல்கலைக்கழகக் கல்வி மட்டுமன்றி பாடசாலைக் கல்வியையும் பணம் கொடுத்தே பெற வேண்டிய நிலை இதன் மூலம் ஏற்படப் போகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதை பிரதான மார்க்கமாகக் கொண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்...

All posts loaded
No more posts