- Wednesday
- April 23rd, 2025

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியிலிருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 58 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் இரு மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்தபின் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கடற்படையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச நேற்று உத்தரவிட்டுள்ளார். (more…)

இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கையின் வடபகுதிக்கு 31,500 வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் பயணம் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2011 ம் ஆண்டில் இருந்து 51.400 பேர் வடக்குக்கு பயணம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 நாடுகளின் பயணிகள் இதில் அடங்குகின்றனர். (more…)
கைதடி மத்திய மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ...
யாழ்.கொட்டடிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரிவைத்தியக் கலாநிதி யமுனாநந்தா பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.நேற்று வைத்தியர் தனது வாகனம் பழுதடைந்த நிலையில் பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் மற்றொரு வாகனத்தில் பயணித்துள்ளார்.இந்நிலையில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அந்த வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது. (more…)

கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 20 லட்சம் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா. நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் இம்முறை முன்னைய காலங்களைவிட சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றி ருந்ததாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்துகூட தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவுக்கு...

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்....
வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்தில் இன்று அலுவலக செயற்பாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று திறக்கவிருந்த நிலையில் அதிகாலை குறிப்பிட்ட புதிய கட்டிடத்திற்கு; இனம் தெரியாத நபர்களினால் கழிவு ஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டது. எனினும் திட்டமிட்ட படி குறிக்கப்பட்ட நேரத்தில் ஊழியாகள் ,தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இனைந்து கட்டடத்தை...

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள்...

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று முதல் மூடப்படுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யூலை 4ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பினை மேற் கொண்டு வருகின்றனர். கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவதும்...

பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப் புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

சங்கிலியன் தோப்பு கிட்டு பூங்காவில் நேற்று (18.08.2012) மாலை 6.30 மணிக்கு “தெய்வீக சுக அனுபவம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இசை நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் முன் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரபல கர்நாடக இசைப்பாடகர்களான ஸ்ரீ உன்னி கிருஸ்ணன், ரி.எம். கிருஸ்ணா ஆகியோருக்கும் ஏனைய அணிசெய் கலைஞர்களுக்கும்...

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அர்ப்பணித்த செயற்பாடுகள் காரணமாக ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக திகழ்வதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது.இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக...

யாழ்ப்பாணத்த்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்ப்பதற்கு பயிற்சி நிலையம் ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக கர்நாடக சங்கீத வித்துவானும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம் வியாழக்கிழமை காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.முருகனிடம் அருளைப் பெற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார். (more…)

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்புத்தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வருடாவருடம் நடைபெறும் பெருந்திருவிழாவில் வழமையாக வாசிக்கும் ஏகபோக உரிமையானது வித்துவான் பத்மநாதன் மறைவின்பின் பாலமுருகன் குழுவினருக்கு கிடைத்திருந்தது (more…)

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது. (more…)

All posts loaded
No more posts