- Monday
- May 5th, 2025

வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சியைச் சேர்ந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த வீதி வேலை செய்து வரும்...

யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை முன் பழைய மாணவிகள் இன்றைய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது இதில் வேம்படிக்கு வேண்டும் நிரந்தர அதிபர் கல்விப் புலமே குழப்ப நிலையினை நியாயமாக தீர்த்து வை ! (more…)

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரத்தினசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்....

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார். (more…)

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.கல்வி, முன்பள்ளி, விளையாட்டு, குடிநீர், சனசமூக நிலைய அபிவிருத்தி, நூலகம், மாதர் அபிவிருத்தி, மின்சாரம் என பல்வேறு துறைகளுக்கென குறித்த நிதி...

யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாள்வெட்டுக்கு இலக்காகிய குறித்த நபர் கை மற்றும் வயிற்று பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து, தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணயம், வடகிழக்கு இணைப்பு ௭ன்பவற்றினை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்தின் மேலான பற்றுறுதியை வெளிக்காட்டுமாறு தமிழ்மக்களிடம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: (more…)

யாழ். வேம்படி மகளீர் கல்லூரி அதிபர் விவகாரம் இதுவரை தீர்க்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி பழைய மாணவர்களால் எதிர்ப்பு பேராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ் எதிர்ப்பு போராட்டம் நாளை காலை 8 மணியளவிவில் பாடசாலை முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாநகர சபையின் உரிய அங்கீகாரம் இல்லாமல் இவ்வருட முற்பகுதியில் 60 இலட்சம் ரூபாவிற்கு ஆளும் ஈ.பி.டி.பி கட்சியினர் தமது எண்ணப்படி வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, பின்பு மூடு அங்கீகாரம் பெற்றுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ. மாநகரசபையின் எட்டாவது மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...

வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன் என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில், என்று குறிப்பிடப்படுகிறது.வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது.அப்படியான ஓர் அரிய நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள அறிவியல், கல்வி தகவல்...

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்த அடியவர் மீது தொண்டர் ஒருவரினால் காலாலும் கையாலும் தாக்கப்பட்டு முகத்தில் காயம் அடைந்த சம்பவம் நேற்றைய தினம் தீர்தக்கேணியில் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் தெல்லிப்பளை தூக்கையம்மன் ஆலய தீர்த்தக்கேணியில் சுவாமி தீர்தம் ஆடுவதற்க்காக வந்திருந்தது. (more…)

லொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். (more…)

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடுவதற்கான அலுகோசு பதவிகளுக்கு சுமார் 150 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதகாவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றும் நேற்று முன்தினமும் மூவர் கொண்ட குழுவொன்றினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன. (more…)

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உயர்கல்வி சேவைத் துறையொன்றை உருவாக்குவதற்குமான அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைச்சரவை நேற்;று அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் தற்போது நடைபெறும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

இந்து ஆலயங்களில் மிருகப்பலி செய்ய வேண்டாமெனக் காலத்துக்குக் காலம் நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம். இது எமது சமயத்திற்கு ஒவ்வாத, ஏற்றுக்கொள்ள முடியாத பாவச்செயல் எனச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். என அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

பரந்தன் பகுதியில் இராணுவத்தினரின் பதிவு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பயப்பீதி ஏற்பட்டுள்ளது.இப் பகுதியில் உள்ள வீடுகளுக்குப் பதிவுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் ௭னவும் மறுநாள் தாம் பதிவுகளை மேற்கொள்ளப்போவதாகவும் கூறிச்செல்கின்றனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்குமாடிக் கட்டடத் தொகுதியின் நான்காவது மாடியில் சிறுவர்களுக்கான மருத்துவ விடுதியை ஆரம்பிப்பதற்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்து பல மாதங்களாகிவிட்டது.இருந்தபோதிலும், "லிப்ற்' அமைக்கப்படாததனால் குறித்த சிறுவர் மருத்துவ விடுதியை ஆரம்பிக்க முடியாதுள்ளது இவ்வாறு போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

கைதடி அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கைதடி அரச சிறுவர் இல்லத்தில் 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் மாத்திரமே இருக்கின்றனர். (more…)

வலி தென்மேற்கு பிரதேச சபையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியாக பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசனால் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. (more…)

வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தினருக்கு வீடமைப்பதற்கு என சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது. (more…)

All posts loaded
No more posts