- Wednesday
- January 22nd, 2025
எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125...
“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று...
தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான...
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறுவதில் எவ்வித உண்மைகளுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சுப்...
உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்பத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக...
கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதால் இது தொடர்பிலான ஆவணங்களை வெளிப்படுத்துகிறேன் என்று கூறி சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் சில ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார். ஜூலை 10, 11 ஆம் திகதியிடப்பட்ட கடிதங்கள் முறையே நிதி அதிகாரம் வழங்குவதும், கணக்காளருக்கான ஆளனி அனுமதியுமாகும் என அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத்...
"போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், "அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு...
தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு சனிக்கிழமை (06.07.2019) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியத் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு...
தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று...
பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில் ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...
தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டையும் உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது முதலாவது தேசிய மாநாட்டை நாளை 06.07.2019(சனிக்கிழமை) அன்று நடாத்துகிறது. இம்மாநாடு அன்றைய தினம் மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிவரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக...
யாழ். மானிப்பாயில் ஆவாக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் இளைஞரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளில் பல புதிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன. ஆவா குழுவிலிருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்படும் மற்றொரு குழுவின் தலைவன் மீது தாக்குதல் நடாத்தவே இணுவில் பகுதிக்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறித்த நபர்கள் வந்துள்ளதாக...
யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய துணைவேந்தர் தெரிவுசெய்யப்படும் வரை இவரது நியமனம் செயலில் இருக்கும்.துணைவேந்தர்கள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நியமனம் வழங்கப்படுவது வழமை. இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில்...
யாழ்.பல்கலைக்கழக வளாககத்துக்குள் இராணுவத்தினர் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிரு;தனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தங்கியிருந்த விடுதிகளில் தமிழீழத்தின் வரைபடம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு...
"வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி" என்ற தலைப்பில் ஆளுனரின் வட்டமேசை மாநாடு யாழ் பொது நுாலகத்தில் இன்று(4) இடம்பெற்றது வடக்கு மாகாண மத்தியவங்கி முகாமையாளர் சிவதீபன் , சிரேஸ்ர விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் , ஆளுனர் சுரேன் இராகவன் , மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி திரு. செல்வின் ஆகியோர் உட்பட பலதரப்பினர் பங்கேற்றிருந்தனர்...
வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) அனைவரும் பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நீங்கள் புதிய தொழில்முயற்சி ஒன்றை ஆரம்பிக்க விரும்புகின்றீர்கள் அல்லது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றீர்கள் இந்நிலையில் உங்களுக்கு ஒரு அலுவலகம் தேவை அதற்காக முதலீடு...
அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதங்கள் தொடர்கின்றன. இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழு அறிக்கைகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதற்காக வழிப்படுத்தும் குழுவினால் உருவாக்கப்பட்ட நிமித்த உபகுழு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவிற்காக...
புதிய மாணவர் அனுமதி தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம் இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான...
Loading posts...
All posts loaded
No more posts