- Sunday
- February 23rd, 2025

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள்...

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வருகின்ற தேர்தல்களில் அதற்கான சாத்தியம் இல்லை எனிலும் 2020 இல் அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது இலங்கையின் இடம்பெறும் தேர்தல்களின்போதும் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை ஏற்படுத்தினால் அதன்போது எவ்வகையான இலத்திரனியல் பாதுகாப்புக்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பணிமனையில் இடம்பெறும்...

வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று (23) மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும்...

“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி நேற்றுத் திங்கட்கிழமை(22) முற்பகல்-09.30 மணியளவில் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. “பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம்” எனும் தொனிப் பொருளில் இம்முறை பனை எழுச்சிவாரம் இடம்பெறுகிறது. வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் பொ....

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது எனப் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் நிரந்தரத் தீர்ப்பு எதிர்வரும் 5ம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கி உத்தரவிட்டதோடு அமைச்சரவையும் மாற்றம் செய்திருந்தார். அவ்வாறு தன்னை இடை நிறுத்தியமை சட்டவிரோதமானது...
அரச வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...
"சந்தையில் உள்ள ஊதுவர்த்திகள் ஒரு தீவிர நச்சு புற்றுநோயாகும்" என சுகாதார அமைச்சின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர்.இனோகா சுரவீரா எச்சரித்துள்ளார்.. இலங்கையில் ஊதுவர்த்திகளின் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை ஆனால், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஊதுவர்த்திகளில் பலவிதமான நச்சு இரசாயனங்கள் உள்ளன, அவற்றில் கொந்தளிப்பான...

இலங்கை மின்சார சபை பல விடயங்களில் மேன்மை அடைந்து விட்டது ஆனால் அதன் பராமரிப்பில் உள்ள வீதி மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை. அசமந்த போக்கே தொடர்கின்றது. என யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றம்சாட்டியுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாநகர சபையின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார உறுப்பினர்கள்...

சந்திராயன் -2 இன்று விண்ணில் ஏவப்பட்டது! இதன் சிறப்புகள் பல அவற்றுள் முக்கியமானது இந்தச் செயற்கைக் கோளின் முழு ஆணைகளும் (Commands) ரிது, வனிதா என்ற இரு பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்தத் திட்டத்தின் இயக்குநரே (Mission Director) ஒரு பெண்தான். ரிது செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்பியதில் (மங்கல்யான்) முக்கியப் பங்காற்றியவர். வனிதா விருது பெற்ற...

திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் எழுத்தானை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர், கொழும்பு...

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பணிமனை இன்று திங்கட் கிழமைநண்பகல் 12.30 மணியளவில் செயலாளர்நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால்வைபவ ரீதியாக திறந்து வைத்து மாவட்டபணிமனை பெயர் பலகையையும்திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாக இணைஉப செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டஅமைப்பாளருமான எஸ்.சோமசுந்தரம், பொருளாளரும் பொருளாதாரவிவகாரங்களுக்கான உப செயலாளருமானபேராசிரியர் வி.பி.சிவநாதன், நிர்வாக இணைஉப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதிரூபா சுரேந்திரன், மகளிர் அணி உப செயலாளர்திருமதி இளவேந்தி நிர்மலராஜ், ஊடகம் மற்றும்செயற்றிட்ட ஆக்கங்களுக்கான உப செயலாளர்த.சிற்பரன், தொகுதி அமைப்பாளர்இரா.மயூதரன், இளைஞர் அணி அமைப்பாளர்கே.கிருஸ்ணமீனன், வவுனியா மாவட்டஅமைப்பாளர் செ.சிறீதரன், கிளிநொச்சிமாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடகஉதவியாளர் சதீஸ் ஆகியோர்பங்கேற்றிருந்தார்கள். மட்டு. மாவட்ட பணிமனைக்கு அண்மையாகஅமர்ந்திருந்து அருளாசிகளைவழங்கிக்கொண்டிருக்கும் மாமாங்கேசுவரப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்றதிருவிழாவிற்கு சென்று வழிபாட்டினைமேற்கொண்டதன் பின்னர் மாவட்டபணிமனையை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாமாங்கம் பகுதிமக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய முற்பட்டார் ராஜகோபால். இந்நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர், வரதராஜன் பார்த்திபன் நேற்றைய(18.07.2019) மாநகரசபை அமர்வில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன வைகாசி மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில்...

இன்று காலை 11.30 மணி முதல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் எம்பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை...

https://www.facebook.com/VishnuTNPF/videos/773120919752637/ https://www.facebook.com/VishnuTNPF/videos/445845889302341

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது யாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். மாநகரசபை...

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019 ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள் https://airport.lk/aasl/reach_us/careers.php

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் (Northern Province Round Table) இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ...

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம்...

செம்மலை பழையநீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்தி கொடிகளை அறுத்தெறிந்து குருகந்த ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில்...

All posts loaded
No more posts