இன்று 15.05.2021 சனிக்கிழமை  யாழ் போதனா வைத்திய சாலை முடிவுகளின்படி 44 பேருக்கு தொற்று உறுதி

15.05.2021 சனிக்கிழமை  இன்று வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. * இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-25 * முல்லைத்தீவு மாவட்டம் -3 * கிளிநொச்சி மாவட்டம் -4 * வவுனியா மாவட்டம் -10 *மன்னார் மாவட்டம் -2

மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தின் முன்னுள்ள வேகத்தடை அருகில் தங்கச்சங்கிலி வழிப்பறிக்கொள்ளை

யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது , வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயும் மகளும் மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு முன் வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடைக்கான உயரத்தில் வேகத்தை குறைத்தவேளை திடீரென அவ்வழியால் மோட்டார் சைக்கிளில்...
Ad Widget

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழ்...

நாட்டில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருள்ள காலப்பகுதியில் எக்காரணங்கள் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. திறக்கப்பட்ட மருந்தகங்கள் , பலசரக்கு கடைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான செயலணி...

வடக்கு மாகாணத்துக்கான விசேட நடைமுறைகள் அறிவிப்பு

ஊரடக்கு வடக்கில் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ஆளுனரின் பணிப்பில் அரசாங்க அதிபர்கள் கட்டளைத்தளபதி பொலி அதிகாரிகள் சுகாதரத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று...

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான வட்டியை 6 மாதத்திற்கு நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் மத்திய வங்கியால் வழங்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020  வரை...

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டது.

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின்...

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் -ஆலோசனைகள்

இல்ஙகையில் நாடுமுழுவதும் கடந்த 20ம் திகதி மாலை 6 மணி தொடக்கம்  24 செவ்வாய்க்கிழமை காலை 6  மணிக்கு தளர்த்தப்பட்டு  மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு நாளை காலை விலக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ள வேளையில் மக்கள் என்ன செய்யவேண்டும் என சுயதொழில் முனைவாளரும் தகவல்தொழில்நுட்பவியலாளருமான ...

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (17) முதல் நிறுத்தப்படுகிறது இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இன்றிலிருந்து...

கொறோனா வைரஸ் விழிப்பணர்வு செய்ய முற்பட்ட வேளையில் வைத்தியர் மீது தாக்குதல் றியோ முன்பாக சம்பவம்.

சுகாதார வைத்திய அதிகாரி, ஊர்காவற்துறை, வைத்திய கலாநிதி.நந்தகுமார்  இன்று பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்தில் கொறொனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டபோது றியோ விற்பனை நிலைய ஊழியர்கள் உட்பட்ட வேறு சிலரால் கல்லுகளால் தாக்கப்பட்டுள்ளார் இதன்போது வைத்தியரின் நண்பரும் தாக்கப்பட்டுள்ளார்  இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .இது தொடர்பில்...

அனைத்துத் தரப்புக்களினதும் பங்களிப்பு மிக அவசியம் – வட மாகாண மருத்துவர் மன்றம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து வட மகாகாண மருத்துவர் மன்றம்   ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று பல உலக நாடுகளில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில் தற்போது எமது நாட்டிலும் தொற்றுகள் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் பெருமளவில் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு அனைத்துத் தரப்புக்களினதும் பங்களிப்பு மிக அவசியமானது. தொற்று நோய்...

ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக இலங்கை முடிவு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர்...

தமிழ் தேசம் கோட்பாட்டை வெட்டி அகற்றியவர் விக்கினேஸ்வரன்!- சுகாஸ் பதிலடி

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தில் தமிழ் தேசம் என வரும் இடங்களில் அதையெல்லாம் விக்கினேஸ்வரன் வெட்டி அகற்றியுள்ளார். தமிழ் தேசம், இறைமையை ஏற்பதாக விக்னேஸ்வரன் சொன்னதன் அடிப்படையில்தான் நாம் பேரவைக்குள் வந்தோம். பின்னர், தேசத்தை ஏற்க மாட்டேன் என நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் உள்ளது. தேசத்தை ஏற்க மாட்டேன் என அவர் சொன்னதால்தான் நாம்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் நியமனம்!. முன்னாள் ஆளுனர் சுரேன் ராகவனும் உள்ளடக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்...

தரம் 6 இற்கான அனுமதிக்கு யாழ் இந்துக்கல்லுாரி மாணவர் பட்டியலை வெளியிட்டது

2019 இல் நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிக்கமைவாக யாழ் இந்துக்கல்லுாரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வியமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது இதனடிப்படையில் அதிபரினால் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்க்கடிதத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பத்தினை கல்லுாரியின் இணையத்தளமான www.jhc.lk இலோ நேரடியாகவோ பெற்று...

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெற அதிவேக ‘Fast Track System’ முறை

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக வருபவர்களுக்கு துரித கதியில் சேவையை பெற்றுக் கொடுப்பாதற்காக அதிவேக 'Fast Track System' ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க...

சீனாவிலிருந்து 8 புதிய ரயில்கள்; புகையிரதசேவை இலத்திரனியல் மயமாகும்

எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என  புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டிக்கெட் வழங்குவதை...

வடக்கில் புதிய மாற்றணி தயாராகிறது. நீதியரசர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறார்.ரெலோவும் இணைகிறது?

நடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி முயற்சிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இணைவில் ஏற்பட்ட முரண்பாடுகளுடன் அமைதியாகியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சனாதிபதித்தேர்தலில் அனைவரது கவனமும் குவிந்திருநதது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்த நிலையில் வடக்கு...

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய்ப்பட்ட அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது  லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக  கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால்  இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட  வேளை அவருக்கான விளக்கமறியலை ஒக்டோபர் 15ம் திகதிவரை...

வடக்கு நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் பொறியியலாளர் கைது

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்ட மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால்  ஆரம்ப விசாரணைகள் மேற்கொெள்ளப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விடயம் சம்மந்தப்பட்ட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டது. இவ்வாறு பணிக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்ட கோவைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ,...
Loading posts...

All posts loaded

No more posts