WT1190F மர்மப்பொருள் இலங்கை அருகில் விழும் காட்சி வெளியானது

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய...

இனி தேநீரில் சீனி கலப்பது தடை!

தேனீர்  வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில்  வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த  உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...
Ad Widget

பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு நீண்டகாலமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள்  ”நல்லாட்சி” அரசு என்று கூறும் அரசாங்கமும்...

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் விபரம்

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன . 1. தங்கராஜா புவனேஸ்வரன் 2. சுந்தரலிங்கம் அகிலன் 3....

விடுதலை செய்யப்பட்டவர்கள் 6 பேர் போதைப்பொருள் வியாபாரிகளும், கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சிங்களவர்கள் -சுரேஸ் பிரேமச்சந்திரன் .

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் வடக்கு மாகாண அமைச்சரவை சந்திப்பு

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பு பற்றி முதலமைச்சர்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டவாறு இடம்பெறும்

அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...

பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது! -மேல்மாகாண முதலமைச்சர்

பாடசாலை ஆசிரியைகள்  தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக    மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று  முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...

டி.எம் சுவாமிநாதன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக நியமனம்

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்களானது, அமைச்சர் சகலா ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சகலா ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்இ சிறைச்சாலைகள்...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும். 1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன்...

யாழ் நகரில் நாக விகாரையில் ”கட்டின” பூஜையும் பெரகரவும்!

பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் குடியிருப்புக்கள் வெள்ளத்தில்!

நாவாந்துறை பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் சரியான வடிகாலமைப்பு வசதிகள் இன்றி குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. நகரில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்கள் தண்ணீரால் அவதிப்படும் காட்சி வருத்தமளிப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்றது . யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் சுகாதாரபிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது...

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு செருப்படி! சென்னையில் சம்பவம்

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக்...

ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்ட காணொளியை வெளியிட்டது ஐஎஸ்ஐஎஸ்! ரஷ்யா மறுப்பு!!

கடந்த சனிக்கிழமை எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் 224 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த இயக்கத்தினர் மக்களை அச்சுறுத்துவதற்காக கட்டுக் கதைகளை வெளியிடுவதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் அந்த இயக்கத்தினர் தாங்கள்...

கோலாகலமாக நிகழ்ந்தேறிய வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி

வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று  ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத்...

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்...

அமிர்தலிங்கம் ஏன் எதற்காக கொல்லப்பட்டார் ?

தமிழர் வரலாற்றில் தமிழீழம் தான் தீர்வென்று மேடைகளில் எழுபதுகளிலேயே முழங்கிய தமிழ் அரசியல் தலைவர் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். தமிழர் வரலாற்றில் இவருக்கென்றும் ஒரு பக்கத்தை காலம் திறந்துள்ளது. மேடைப் பேச்சுக்கும், இவரது செயல் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் போன்றவர்களது ஒரே குறிக்கோள் பதவி நாற்காலியே. (தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் போல) அந்த நேரத்தில்...

எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் – கைதியின் தாய் !

எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சங்கத்தின் வன்னிக்கிளை உதயம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts