- Sunday
- January 26th, 2025
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காமையால், அதன் பின்னர் இடம்பெற்ற...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...
வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை. மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித...
தமிழினத்தின் விடுதலைக்காக உயிர் துறந்த உத்தமர்களின் நினைவாலயங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நினைவுச் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அவர்களது நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர்களின் நினைவாக மரங்களை நாட்டிப் போற்றுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினமான இன்று உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கொள்ளும்முகமாக இத்தாவில்...
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி...
தொடர் ஏமாற்றங்களும், விரக்;திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை மீண்டும் வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். செந்தூரனின் உயிரிழப்பு தொடர்பாக அவர்விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், வலிகளோடும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்ற தமிழினம், தன்...
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன்...
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சக தமிழ் அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் அவர்களால் “சாவின்...
என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது அங்குள்ள வானொலி ஒன்றிற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாகவும், முதலமைச்சர் முன்னாள்...
தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் .மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வெள்ளிகிழமை இடம்பெற்ற...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்....
யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...
நயினாதீவு என்ற தீவின் பெயர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கவனத்தில் எடுக்குமாறு வடமாகாண அவைத் தலைவர் சிவீகே. சிவஞானம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு, "அத தெரண’’ என்ற இணையத் தளத்தில் நாகதீப என்ற தீவின் பெயரை நயினாதீவு என்று மாற்றம்...
இலங்கையிலிருந்து சென்ற யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் Scoresby, St Judes Community Centre க்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த மண்டபத்தில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிந்திய செய்தி குறித்த கூட்டம் பிறிதொரு இடத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts