- Friday
- January 24th, 2025
கிளிநொச்சி கால்நடை சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தில், மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன் கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கில் இருந்து இராணுவத்தை அனுப்புவதல்ல நோக்கம், இராணுவத்தை கொண்டு தமிழ் மக்கள் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ ( ) தலமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், திரு. ஜனார்த்தனன் மற்றும் பேரவை உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவருமான...
அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை வீட்டிற்கு வெளியில் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் வெட்டப்பட்டு கையிலும் முதுகிலும் துடையிலும் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இதுகுறித்த தெரியவருவதாவது இன்று காலை சில இனந்தெரியாத நபர்கள் இளம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்து வீட்டாரை விசாரித்துவிட்டு அவரை வெளியில்...
பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக...
இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், அமல் அகஸ்டின், இவர் வலைத்தள முகவரிகளை தனது பெயரில் பதிவு செய்து கொள்ளும் பொழுதுபோக்கு உடையவர். maxchanzuckerberg.org என்ற வலைத்தள முகவரியை தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார் அகஸ்டின். இந்நிலையில், வலைத்தள...
இம் முறை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டாக இதைக் கருதுவதால் இதனை தடை செய்யக்கோரி பொலிஸ் நிலையங்களில் சுற்றரிக்கை வெளியிடப்பட்டமைக்கு அமைவாக குறித்த விளையாட்டினை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தடையினை...
தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு ஏப்ரல் 15 ம்திகதி வெள்ளிக்கிழமையும் தேசிய பொது விடுமுறை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே 13ம் 14ம் திகதியும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
பருத்தித்துறைப்பகுதி மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மாசடைந்த நீர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீரினை நேரடியாக பலர் பயன்படுத்துகின்ற நிலையில் அதனை பயன்படுத்தும் மக்கள் வீட்டில் வடிகட்டிய பின்னர் வடிகட்டியினுள் எஞ்சும் நீர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. குடிநீர் என்று குழாய்கள் மூலம் கட்டணத்திற்கு அரசினால் விநியோகிக்கப்படும்...
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதோடு, செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் கசீம், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா...
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து 2 ஆம் வருட மாணவர்களுக்கான விடுதிகள் மூடப்பட்டு அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு...
இலங்கையில் ஊடகப் பணியின்போது மரணித்த 44 ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக யாழ். பிரதான வீதியில் – யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக நினைவுத் தூபியொன்று நேற்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு – தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உறவினைக் கட்டி எழுப்பும் முகமாக மூன்று நாள் பயணமாக குடாநாடு வருகைதந்த அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். அந்த...
எகிப்த்தின் உள்நாட்டு பயணிகள் விமானம் MS181 கடத்தப்பட்டுள்ளது. அலக்சாண்டிரா வில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே கடத்தப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட விமானம் தற்போது சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த Airbus 320 ரக விமானத்தில் 81 பயணிகள் இருந்ததாக எகிப்தியன் ஏயார் நிறுவனம் கூறுகின்றது. விமானியிடமிருந்து கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின் படி வெடிக்கும் பட்டியணிந்த பயணி...
இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தின் காணிகளை, சிறுபான்மை மக்கள் சுவீகரித்து...
தகவலறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை இன்று(8) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த சட்டமூலம் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அனுமதியைப் பெற்றுள்ளதாக, கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வட...
2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து...
யாழ்.தனியார் பஸ் நிலையம் அருகில் 14 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரு இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் காலை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 8.கிலோவும் 400கிராமும் பெறுமதியான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும்...
புதிதாக பதவிஏற்றுள்ள யாழ் கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் மகா சிவராத்திரிக்காக கோயில் துப்பரவு செயற்பாடுகளும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக, தமது படை வீரர்களைக் கொண்டு குடாநாட்டில் உள்ள முக்கிய ஆலயங்கள், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை புனிதமாக்கும் பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்....
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு...
எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில், 'இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல்...
Loading posts...
All posts loaded
No more posts