- Monday
- February 24th, 2025

யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று...

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஓரிரு நாட்களுள் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய உளவுத் துறை பணிப்பாளர் சிரேஷ்ட...

கிளிநொச்சி 55ஆம் கட்டைக்கு ஏ9 பாதையில் இன்று மாலை ஒரு சிலர் குடித்துவிட்டு போதையில் வீதியால் போகிற வாகனங்களை மறித்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடிய வண்ணம் இருந்துள்ளனர். ரிப்பர் வாகனம் ஒன்று வந்தபோது அதை மறித்து அதன் கண்ணாடியை உடைத்துள்ளார்கள். கர்த்தாலை ஒட்டி உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொலிசார் உடனே சம்பவ இடத்துக்கு...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெருத்தத்...

மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் எனபல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது அவர்களது அறிக்கை வருமாறு கடந்த வெள்ளிக்கிழமை(20-10-2016) இரவு கொக்குவிலில் இரண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானது எமக்கும் யாழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் வேதனையையும் தருகின்றது. நல்லாட்சி அரசு என்கின்ற பெயரில் ஆட்சி...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை திங்கட்கிழமை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மேற்படி கர்த்தால் அழைப்பும் வெளிவந்துள்ளது. 1.இலங்கை தமிழரசுக் கட்சி 2.தமிழீழ விடுதலை இயக்கம் 3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி...

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை சாதாரண விடயமாக பார்க்கமுடியாது பாதுகாப்பு செயலரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் வடக்கில் நடந்தால் நாம் போராடாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தார் அதன் அழைப்பாளர் லஹிரு வீரசேகர. அவர் மேலும்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கே.கே.எஸ் வீதி குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கொடூர சம்பவத்தினை நாங்கள் வன்மையாக...

யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வுப்பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது சுமந்திரனுக்கு இரகசிய காதலா ? போற இடம் எல்லாம் எம்மைப் பற்றியே கதைச்சுக் கொண்டு திரியுறார்.பாவம் சுமந்திரன் இப்ப சரியா பதட்டபடுகிறார். என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பனார்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாட்டுப்பயணம் சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும்,...

சம்பந்தனை கொலை செய்வதற்கு 25 மில்லியனுக்கு கூலிப்படை!- பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறைப்பாடு
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு ரூ 25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வடக்கு முதல்வர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது முறைப்பாட்டின் பிரதியை சனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளார்...

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர்...

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் ஜெனதாஸ் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார். இவரது மனைவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார்.பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர்...

அப்துல் கலாம் யாழ். மண்ணிற்கு விஜயம் செய்தமை இங்குள்ளவர்களைப் போன்று நாங்களும் மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.கே அப்துல் கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று(15) சனிக்கிழமை முற்பகல் யாழ். பொது...

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு நிரந்தர நியமனம் வேண்டி யாழ் மாநகரசபை தொழிலாளிகள் கடந்த ஏழுநாட்களாக போராடிவருகின்றனர். இவர்களது இந்த போராட்டமானது சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நியாயமான தீர்வொன்றினை வழங்குவதற்கு மாநகரசபையும் மாகாணசபையும் இதய சுத்தியுடன் முன்வரவேண்டும் என எமது ஊழியர்சங்கம் விரும்புகின்றது. மாநகரசபையில் சுத்திகரிப்பு மற்றும் வேலைப்பகுதி ஆகியதுறைகளில் ஏழு...

மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின்...

(நேரடி செய்தி அறிக்கை ) மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசின் “இலங்கை அரசியல் யாப்பு (1931-2016)” நூல் வெளியீடும் ஆய்வும் இன்று(01.10.2016) சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களும் , வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை...

ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை 9.00 மணியளவில், யாழ். ராஜா கிறீம் ஹவுஸ், சரஸ்வதி மண்டபத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் தலைமையில்...

All posts loaded
No more posts