- Friday
- January 24th, 2025
படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் இறுதி முடிவு தேவை என அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக...
இலங்கையில் முஸ்லிம் அரங்கில் இன்று பேசு பொருளாக முஸ்லிம் தனியார் சட்டம் மாறியுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சரவையின் உப குழு நியமனமும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜீன் லம்பெர்ட் தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் வெளிப்பாடும் இதன் மீதான விவாதத்தை அதிகரித்துள்ளது.முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த...
வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களால் 2.11.2016 அன்று அவரது முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட அழைப்பிதழ் சம்பந்தமாக சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .புத்தளம் பாரளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் கௌரவிப்பு விழா நவம்பர் 6ம் திகதி எடுப்பதாக இந்த அழைப்பிதழ் கூறுகின்றது. அத்துடன் ஏற்பாட்டாளர்களாக கல்வி அமைச்சின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன் அரச...
நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டி சமயப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளப்போவதாக வட மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாளை (2) நல்லூர் ஆலய முன்றலில் 1008 தேங்காய்கள் உடைத்தும் பெரியன்னை தேவாலயத்தினில் மெழுகுதிரி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். யாழ்.ஊடக அமையத்தில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...
இன்று கீரிமலையில் மைத்திரி ”நல்லிணக்கபுரம்” வீடுகள் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் மாணவர்கள் இழப்பு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். தென்னிலங்கையில் இவ்வாறு மாணவர் கொலை செய்யப்பட்டால் இதை விட மோசமாக வெகுண்டெழுந்திருப்பார்கள். அந்தவகையில் பக்குவமாக நடந்து கொண்டதற்காக வடக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதிவழங்கப்படும். மாவை சொன்னதுபோல...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....
யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் முன்னரே முடக்கப்பட்ட நிலையில் இன்று நிர்வாகச் செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாணவர் கொலை தொடர்பில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை நிர்வாகச்செயற்பாடுகள் மடக்கப்படும் என மாணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனது உரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வர் தடை போட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு கூட்டமைப்பால் மேலதிக ஆசனம் ஊடாக வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்...
எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அதை நாம் மறந்துவிடமுடியாது. ஐநாவில் தீர்மானம் இயற்றும்போது அவர்கள் அதற்கு எதிராக இராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள் அதை நாம் மறந்துவிடமுடியாது. அதற்காக முஸ்லிம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. முஸ்லிம் மக்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் துன்பியல் சம்பவம். போராட்டத்தில் முஸ்லிம்...
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
நாவலர் வீதியில் இடம்பெற்ற திருட்டு CCTV பதிவுகள் வெளியாகியுள்ளது. சைக்கிளில் வந்தவர்களே அதை செய்திருப்பதாக கருதப்படுகின்றது.
வடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது...
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணியளவில் வீட்டினை பூட்டிய பின்பு வழமை போன்று பணிக்குச் சென்றுள்ளனர். இதில் கணவர் கூட்டுறவுத் திணைக்களத்திலும் மனைவி ஆசிரியராகவும் பணிபுரிகின்றார். இவ்வாறு பணிக்குச் சென்றவர்களின் வீட்டிற்கு ஆசிரியரின் தாயார் 10 மணியளவில் சென்று திரும்பிய நிலையில் அவசர பணி நிமித்தம் ஆசிரியரும் விடுமுறை...
நல்லாட்சி அரசாங்கத்தில் 2017ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு முன்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அரசாங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தெரிவதாகவும் கூறினார்....
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
2019ஆம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கூறுகையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்ற ப்படும்.13ஆம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க...
வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வடமாகாண பிரதி அவைத் தலைவராக கடமையாற்றிய மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த 07 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து வட மாகாண சபைக்கான பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்து குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வட மாகாண...
வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸாரின்...
நேற்று மாணவர் ஒன்றியத்தினால் ஆளுனருக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கள கடிதத்திற்கு பதிலாக ஆளுனர் இன்று தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கான நடவடிக்கையினை மொழிகள் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் எடு்த்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் கூறியதாவது என்னை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அறிவித்தபோது, அந்த...
Loading posts...
All posts loaded
No more posts