- Monday
- February 24th, 2025

இன்று மாலை 6.05 அளவில் தாயகம் எங்கும் பரவலாக மாவீரர் துயிலுமில்லங்களிலும் பொது இடங்களிலும் இல்லங்களிலும் ஈகைத்தீபம் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு https://www.facebook.com/shritharanmp/videos/667012260126208/ (Video)...

தமிழ் மக்கள் பேரவையானது எமது மக்களின் பிரச்சினைகள் குறித்தான வெளிப்படையான உரையாடலை இலங்கைத்தீவின் அனைத்து இன மக்களுடனும் நேரடியாகவே மேற்கொள்ளும் தனது முடிவை செயல்வடிவில் முன்னெடுக்கத்தொடங்கியுள்ளது . "வடக்கு தெற்கு உரையாடல்" எனும் தொனிப்பொருளில் தெற்கு மக்களுடனான நேரடிதொடர்பாடலை அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உள்ளது . அதன் ஒரு அங்கமாக 22/11/16 அன்று கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் பத்திரிகையாளர்...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேக நபர்களான இளைஞர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என மொழிகள் மற்றும் சகவாழ்வு நல்லிணைக்க அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இம்முடிவு சற்று முன்னர் கூடிய ஐதேமுன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் இன்று காலை,...

யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளனர் . இன்று(23) அதிகாலை 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார் இப்படி ஒரு கொண்டாட்டமும் இனி கொண்டாட முடியது எனவும் அப்படி செய்தால் சுடுவோம் எனவும் அச்சுறுத்தி சென்றுள்ளதோடு சில...

உயர்தேசிய தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டப்படிப்பை நிறைவுசெய்த மாணவருக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ்களை வழங்கி வைத்தார்

'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்' என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் உள்ளது. இதனால் தான் வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள். சொந்த காணியில்...

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாட்டில் நடந்தது என்ன? https://www.facebook.com/virakesari/videos/10158046197130019/ நன்றி வீரகேசரி இணையம்

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் அவர்களின் உரை வருமாறு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அதன் செயற்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக நாம் இங்கு...

கடந்த மாதம் 20 திகதி காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் பெற்றோர், பல்கலை மாணவர்கள். உபவேந்தர் மற்றும் பல்கலை விரிவுரையாளர்களை ஆகியோரை சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் இன்று (21)சந்தித்துள்ளார். யாழ் பல்கலைகழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது...

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்துள்ளார். அத்துடன், தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவாவது கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும்...

உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்? இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை...

இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் பரோனஸ்அனெலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும்,...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய இளைஞரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்தமைக்கான ஆதாரங்களைக்கூட அவர்கள் வழங்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து கட்சி உறுப்பினர்கள் எமது தளத்துக்கு தகவல் தருகையில் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் கட்சியினருடன்...

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்திருந்தது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டு இறுதியாக...

இந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும்...

இன்று(5) யாழ் இலங்கைவேந்தன் கலைக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கூட்டமைப்பினை உடைப்பது எனது நோக்கமல்ல.என்னால் தமிழ்கூட்டமைப்பின் ஒற்றுமையினை சீர்குலைப்பதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இது சில தனிப்பட்டவர்களின் கருத்தாக இருக்கலாம்.பல்லாயிரம்...

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்துள்ளது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது...

முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5) ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் முதலமைச்சராக விக்கினேஸ்வரனை தெரிவு செய்ய கூட்டமைப்பு ஏகமனதாகவே முடிவு செய்தது . மாவை...

All posts loaded
No more posts