- Wednesday
- April 9th, 2025

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். கடலில் தத்தளித்தவர்களை கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம் .தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர...

வௌவாலிலிருந்து பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸை சீனாவின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான ஆய்வாளர்கள், மேற்கொண்ட ஆய்வில் இப்புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எச்.கே.யு.05 வி-02 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வைரஸ்...

யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை...

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்றைநய தினம் (20) வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தையிட்டி விகாரையில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம்...

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா நேற்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு...

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது....

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது. இதன்போது...

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர் மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்களை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று(20) நண்பகல் 12 மணிக்கு...

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரி பயன்படுத்தியதாக கூறப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி நீதிமன்றத்தில்...

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகர சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின்...

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்...

முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி...

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை...

All posts loaded
No more posts