Ad Widget

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க வௌியான விசேட வர்த்தமானி!

மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே. கே. சரத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி...

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணி பிரச்சார குழு பிணையில் விடுதலை!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நீர்வேலி பகுதியில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள்...
Ad Widget

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த...

ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதல் இடமாற்றம்-கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் இம்முறை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத்...

அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு!

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. [caption id="attachment_59218" align="aligncenter" width="758"] healthcare, people, charity and medicine concept - close up of woman in t-shirt with breast cancer awareness ribbon over pink...

தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணி பிரச்சார குழுவை கைது செய்து பொலிஸார் அடாவடி

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்று முன்தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த வேளை, ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர...

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள்: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் குழுக்களாக தங்கியிருந்து இணைவழி ஊடாக பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் அண்மைக்காலமாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணியாக எமது தமிழ் தேசிய மக்கள் முன்னனி உள்ளது!!

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது....

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று முதல் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்பட வேண்டும்!!

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இந்திய நிதியுதவியுடன் மஹவ- ஓமந்தை புகையிரத பாதை புனரமைப்பு கருத்திட்டம் 2019.11.29 ஆம் திகதி ஆரம்பமானது....

தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்ட முற்பட்டவர் காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம்...

போலித் தொலைபேசி அழைப்பால் தொலைபேசி வெடிக்குமா??

4 அல்லது 13 எண்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. SLCERT சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல இந்த விடயம் தொடர்பாக பல அழைப்புகள் வந்துள்ளதாக...

கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (24) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த...

கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால்...

கொழும்பு, யாழ் மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயளர்கள்!!

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், அதில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த மாவட்டங்களில் சுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு நீரிழிவு...

16 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று (23) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை வாரத்தில் 04 நாட்கள்!!

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக, எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்தோ, லங்கா படகுச்சேவை தனியார் கம்பனியின் நிர்வாக பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் இதுபற்றித் தெரிவித்தார். அத்துடன் பயணிகளுக்கு அறவிடப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் அவர்...

நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்!!

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார். [caption id="attachment_123398" align="aligncenter" width="768"] Most ischemic strokes are caused by atherosclerosis, which is also called...

அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் யாழில் கைது!!

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்!

024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா...
Loading posts...

All posts loaded

No more posts