யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும்...

யாழ். மின்சார சபை ஊழியரின் மரணம்: சாட்சியங்களை அச்சுறுத்தும் பொலிஸார்

புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கடந்த 10ஆம் திகதி பொலிஸாரினால் துரத்திச்செல்லப்பட்டு மின்சார சபை ஊழியர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் என்பவர் கடந்த 10...
Ad Widget

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்: விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த கண்டன அறிக்கையில், இரவில்...

ரஷ்ய – உக்ரைன் களமுனையில் இராணுத்தினரை அனுப்பும் தனியார் நிறுவனம்: தயாசிறியின் கருத்தால் பெரும் சர்ச்சை

ரஷ்ய மற்றும் உக்ரைன் போருக்கான வாடகைப்படையினராக செயற்பட இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் நிறுவனமே அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரஷ்யாவுக்கு வாடகைப்படையினராக இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் என்றொரு நிறுவனமே...

யாழ் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!!

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குளிர்ந்த லாவா குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதோடு, 17 பேர் காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான உயிர்ப்பு எரிமலைகளில் ஒன்றான மராபி...

இலங்கைக்கு அருகே வளிமண்டல தளம்பல்!!

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (13) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா...

பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை! குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓட்டம்!!

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று...

மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை இன்று முதல் மீள ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும் குறித்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் 17ம் திகதி முதல் கப்பல்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும்...

வெளிநாட்டில் உள்ளவரின் காணி உறுதியை ஈடு வைத்தவர் விளக்கமறியலில்!!

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை உள்நாட்டில் ஈடுவைத்து பணம் பெற்ற மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்துள்ளார். அந்த உறவினர் அக்காணி...

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

”வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்” என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த ஆளுநர், ”இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கு...

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று வியாழக்கிழமை (9) யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது. குறித்த முற்றுகையில் பருத்தித்துறை மற்றும் நீர்வேலி பிரதேசங்களைச் சேர்ந்த...

ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்!!

இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கையலானவர்கள்...

அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்...

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே தற்போது வெளிநாடுகளில் கூலிப்படை: சவேந்திர சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம்...

கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்!!

ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான...

யாழ்.போதனா குறித்து அவதூறு; இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!!

“சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக” யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகத் தெரிவித்து நபரொருவரினால் சில நாட்களுக்கு முன்னர்...

ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற விளாடிமிர் புடின்!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5ஆவது முறையாக மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்நாட்டு அதிபராக புதின் நேற்று (07) பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி!

தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த...
Loading posts...

All posts loaded

No more posts