- Monday
- January 27th, 2025
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு அதற்கான விசேட...
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம்...
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள...
அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட...
அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில்...
கோப்பாய் பகுதியில் வியாழக்கிழமை (9) ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வியாழக்கிழமை (9) மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை...
காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர். காரைநகர் கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இரவு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 தமிழக மீனவர்களை கைது செய்ததுடன்,...
பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன. அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு பேசும் பொருளாக மாறியுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு...
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் HMPV வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் 20 வருடங்களாக இருந்து வரும் வைரஸ் எனவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பேராசிரியை நிலிகா...
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்...
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு...
நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் தெரிவித்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருக்கும்...
முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தனியார் தொலைக்காட்டசி நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். "முச்சக்கர வண்டியில் மாற்றம்...
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன்,...
ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும், குறித்த வலிந்து இணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள கணவருக்காக...
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்தித்து, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உத்தேசித்திருக்கிறார். பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய...
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின்...
சீனாவில் ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பரவக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்னும் கவலை தெரிவிக்கின்றனர். இந் நிலையில் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பரவும் இந்த வைரஸ் ‘மனித மெட்டாப்நியூமோவைரஸ்’ (HMPV) என அழைக்கப்படுகிறது. குறிப்பாக வடக்குப் பகுதிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இந்த வைரஸ்...
சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் Human...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார். யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும்...
Loading posts...
All posts loaded
No more posts