- Wednesday
- November 27th, 2024
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ்...
ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக வழங்கியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300 மில்லியன் டொலர்கள் (£240m) உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவும்...
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். எங்களின் முயற்சி இரு நாடுகளின் வளர்ச்சியையும் வலுவூட்டும். இது நிச்சயம் ஒரு ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா. இராமாயண பாதை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த பெண் தனது பெற்றோரை இழந்த நிலையில் தனது சகோதரனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அப்பெண் தனிமையில் இருந்துள்ள வேளை...
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்...
தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை...
வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய...
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் -...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில்...
யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் நடைபெற்றது. இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் நேற்று முன்தினம் (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் இதனை...
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நேற்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இந் நடைபவணியானது யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகி பண்ணை வீதி...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று...
காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று திறந்துவைத்தார். கடற்கரையில் குளிக்கும் போதும், விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில்...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய...
வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில்...
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரானில் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை...
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 ஆம் ஆண்டு இவ்வாறு வெடித்த எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, எரிமலையைச் சுற்றி...
நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts