- Tuesday
- November 26th, 2024
தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது. இதேவேளை,...
நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். நயினாதீவில் ஒரு பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை காலமும் ஈடுபட்டு வந்ததுள்ளது. நயினாதீவிற்கு வேலைக்கு செல்வோர் , சுற்றுலா செல்வோர் பிரதேசவாசிகள் என பலரும் தீவினுள் தமது போக்குவரத்திற்கு...
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார்அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர்...
கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அவரது நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (29.04.2024) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கொழும்பை சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முனைகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்பாக தொடர்ச்சியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் உக்ரைன் போர் முனையில் 60 பேரளவான முன்னாள் இராணுவத்தினரும், ரஷ்யப் போர் முனையில் 100 பேர் அளவிலான முன்னாள் இராணுவத்தினரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். உக்ரைன் போர் முனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ சிப்பாய்களில் 15...
வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். நேற்று (28) யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். அவர்...
யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அவரது தாயார் பார்வையிட சென்ற சமயம் அவருக்கு பீடி வழங்கியுள்ளார். அதனை சிறைக்கூடத்திற்குள் வைத்திருந்தவேளை, சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கண்டறிந்து, அவற்றை பறிக்க முயன்ற வேளை முரண்பாடு ஏற்பட்டு,...
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்பை வழங்க வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே,...
இன்று (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும். இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல்,...
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சம்மேளனத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்தார். தமது கோரிக்கைகளுக்கு தீர்வு...
தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம்...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) களவாடி சென்றுள்ளனர். நாகர்கோவில் மேற்கு J/424 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மரமுந்திரிகை பயிற்செய்கை திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. அத் திட்டத்தின் ஒரு பகுதியாக முப்பது ஏக்கர்...
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் உள்ள மகனைப் பார்வையிடச் சென்ற வயோதிப தாய் ஒருவர் அறியாமை காரணமாக மகனுக்கு கொடுக்கவென பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து யாழ். சிறைச்சாலை...
நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு...
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின்...
வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக தனது உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய குறித்த...
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து...
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றையதினம் (25) நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரேரணையை உறுதிப்படுத்தினார். 91 வயதாகும் சம்பந்தன் தற்போது நோயி நிலையால்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் ஏ9 வீதியில் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே...
Loading posts...
All posts loaded
No more posts